அரசியல் செய்தி

தமிழ்நாடு

178- தி.மு.க., போட்டியிட உள்ள மொத்த தொகுதிகள்? கூட்டணி கட்சியினருக்கு 56 இடங்கள் ஒதுக்கீடு

Updated : மார் 02, 2021 | Added : பிப் 28, 2021 | கருத்துகள் (72)
Share
Advertisement
தமிழக சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 234 தொகுதிகளில், கூட்டணி கட்சிகளுக்கு, 56 போக மீதமுள்ள, 178 தொகுதிகளில், தி.மு.க., போட்டியிட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. அது தொடர்பான உத்தேசப் பட்டியலும், வெளியானது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளான இன்று, கூட்டணி கட்சிகளுடன், தொகுதி உடன்பாட்டை முடித்து, அறிவிப்பு வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி, தொகுதி பங்கீடு பேச்சு, நேற்று
தி.மு.க., தொகுதிகள், கூட்டணி கட்சி, முஸ்லிம் லீக்

தமிழக சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 234 தொகுதிகளில், கூட்டணி கட்சிகளுக்கு, 56 போக மீதமுள்ள, 178 தொகுதிகளில், தி.மு.க., போட்டியிட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. அது தொடர்பான உத்தேசப் பட்டியலும், வெளியானது.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளான இன்று, கூட்டணி கட்சிகளுடன், தொகுதி உடன்பாட்டை முடித்து, அறிவிப்பு வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி, தொகுதி பங்கீடு பேச்சு, நேற்று துவங்கியது.

சென்னை, அறிவாலயத்தில், நேற்று மாலை, தி.மு.க., தரப்பில், டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினரும், முஸ்லிம் லீக் கட்சி தரப்பில், தலைவர் காதர் மொய்தீன் தலைமையிலான குழுவினரும் பேசினர்.'கடந்த சட்டசபை தேர்தலில், ஐந்து தொகுதிகளில் போட்டியிட்டோம். தற்போது, ஐந்து தொகுதிகளுக்கும் கூடுதலாக தர வேண்டும்' என, முஸ்லிம் லீக் கட்சியினர் கேட்டனர். தி.மு.க., குழுவினர், 'இரண்டு தொகுதிகள் தான் ஒதுக்கப்படும்' என்றனர். இதையடுத்து, 'நான்கு தொகுதிகளாவது வேண்டும்' என, முஸ்லிம் லீக் குழுவினர் வலியுறுத்தியதை தொடர்ந்து, 'நாளை வாருங்கள், முடிவு சொல்கிறோம்' எனக்கூறி, அனுப்பி வைத்தனர்.

வெளியே வந்த காதர் மொய்தீன், ''கடந்த முறை, ஐந்து தொகுதிகளில் போட்டியிட்டதை, தி.மு.க.,வுக்கு நினைவுபடுத்தினோம். எங்கள் எதிர்பார்ப்பையும் தெரிவித்தோம். நாளை, ஒப்பந்தம் கையெழுத்தாகும்,'' என்றார்.

மனிதநேய மக்கள் கட்சி சார்பில், தலைவர் ஜவாஹிருல்லா தலைமையிலான குழுவினர், தி.மு.க., குழுவினருடன் பேச்சு நடத்தினர்.

பின், ஜவாஹிருல்லா கூறியதாவது:எங்களுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து தெரிவித்தோம். கடந்த முறை போட்டியிட்ட எண்ணிக்கையான, ஐந்து தொகுதிகளை கேட்டுள்ளோம். அனைத்தும் நாளை இறுதி செய்யப்பட்டு, ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுவார். இவ்வாறு அவர் கூறினார்.

இன்று அறிவாலயத்தில், ம.தி.மு.க., - விடுதலை சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் கட்சிகளுடன் உடன்பாடு ஏற்படும் என்றும், நாளை காங்கிரசுடன் பேச்சு நடத்தி, உடன்பாடு காணப்படும் என தி.மு.க., வட்டாரம் தெரிவித்தது.

தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கான, தொகுதி பங்கீடு தொடர்பான உத்தேசப் பட்டியல், நேற்று வெளியானது. அதில், காங்கிரசுக்கு, 25 தொகுதிகள்; இந்திய கம்யூனிஸ்ட், ஏழு; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஏழு; ம.தி.மு.க., ஐந்து; விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, ஐந்து தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.முஸ்லிம் லீக்கிற்கு, இரண்டு தொகுதிகள்; ம.ம.க., இரண்டு; கொ.ம.தே.க., இரண்டு; தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு, ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்ற தகவலும், அப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

மொத்தமுள்ள, 234ல், 56 தொகுதிகளை, கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்து விட்டு, மீதமுள்ள, 178 தொகுதிகளில், தி.மு.க., போட்டியிடும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X