அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,சார்பில் போட்டியிட 7,967 பேர் ஆர்வம்: கொளத்தூரில் போட்டியிட ஸ்டாலின் மனு

Updated : மார் 02, 2021 | Added : பிப் 28, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
சென்னை:சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட, 8,388 பேர் விருப்ப மனு வாங்கியுள்ளனர். 7,967 மனுக்கள் பூர்த்தி செய்து, கொடுக்கப்பட்டு உள்ளன.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு, சென்னை அறிவாலயத்தில், பிப்., 17ம் தேதி முதல், விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டன. இந்த வினியோகம் நேற்றுடன் நிறைவு பெற்றது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கொளத்துாரிலும், இளைஞரணி செயலர்
 தி.மு.க., போட்டி, ஆர்வம், கொளத்தூர், ஸ்டாலின், மனு

சென்னை:சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட, 8,388 பேர் விருப்ப மனு வாங்கியுள்ளனர். 7,967 மனுக்கள் பூர்த்தி செய்து, கொடுக்கப்பட்டு உள்ளன.

தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு, சென்னை அறிவாலயத்தில், பிப்., 17ம் தேதி முதல், விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டன. இந்த வினியோகம் நேற்றுடன் நிறைவு பெற்றது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கொளத்துாரிலும், இளைஞரணி செயலர் உதயநிதி, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியிலும் போட்டியிட விருப்ப மனு வழங்கினர்.

திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ.,வும், நாமகிரிப்பேட்டை ஒன்றிய தி.மு.க., செயலருமான கே.பி.ராமசாமி; ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட தங்கதமிழ்செல்வனும் விருப்ப மனுக்களை வழங்கினர். நேற்று வரை மொத்தம், 8,388 விருப்ப மனுக்கள் வினியோகிக்கப்பட்டன; அதில், 7,967 மனுக்கள் பூர்த்தி செய்து வழங்கப்பட்டுள்ளன.


'மாணவர்களை வஞ்சிக்காதீங்க'



தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிக்கை: சிதம்பரம், அண்ணாமலை பல்கலையில் உள்ள ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரியில், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை எதிர்த்து, மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால், அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள கட்டணம் வசூலிக்கப்படும் என, உறுதியளித்த அ.தி.மு.க., அரசு, அதற்கான அரசாணையை வெளியிட்டது.

'அறிவிப்பது ஒன்று; நடைமுறையில் வேறொன்று' என செயல்படும், இந்த அரசின் ஆணவப் போக்கால், மாணவர்களிடம் இருந்து, தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தன் அரசாணையையே மதிக்காத, அ.தி.மு.க., அரசுக்கு எதிராக, மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரட்டை வேடம் போட்டு, கபட நாடகம் ஆடும் அ.தி.மு.க., அரசு, மாணவர்களை வஞ்சிக்காமல், அரசாணைப்படி கட்டணம் வசூலிக்க வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.



3வது முறையாக கொளத்துாரில்



தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கொளத்துார் தொகுதியில், மூன்றாவது முறையாக போட்டியிட, நேற்று அறிவாலயத்தில், விருப்பமனு அளித்தார்.சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும், தி.மு.க.,வினரிடம் இருந்து, இம்மாதம், 17ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன.

சென்னை கொளத்துார் தொகுதியில், மூன்றாவது முறையாக, ஸ்டாலி,ன் மீண்டும் போட்டியிட உள்ளார்.அதற்கான விருப்ப மனுவை, அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, அறிவாலய மேலாளர் பத்மநாபன், துணை மேலாளர் ஜெயகுமாரிடம், ஸ்டாலின் நேற்று வழங்கினார்.அப்போது, துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Chennai,இந்தியா
01-மார்-202122:11:12 IST Report Abuse
Balaji 8000 X 25000 = 20 கோடி.. பணம் சம்பாரிக்க இதுவும் ஒரு வழி... அல்லது கறுப்பெல்லாம் வெள்ளையானதா?
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
01-மார்-202120:36:32 IST Report Abuse
a natanasabapathy 7967x25000 yevvalavu என்று நினைத்தால் தலை சுற்றுகிறது 10 தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்.
Rate this:
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
01-மார்-202109:08:51 IST Report Abuse
கைப்புள்ள முதலில் தி மு க அழிவது எப்படி என்று யோசியுங்கள். தி மு க அழியாமல் வேறு ஒன்றும் செய்ய முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X