தேர்தல் களம் 2021

தமிழ்நாடு

அமைச்சர்கள் 'கறார்': கேப்டன் மனைவி 'ஷாக்'

Updated : மார் 02, 2021 | Added : பிப் 28, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
கூட்டணி பேச வந்த அமைச்சர்களுக்கு, விஜயகாந்த் மனைவி பிரேமலதா அதிர்ச்சி அளிக்க, அதை விட பெரிய அதிர்ச்சியை தந்திருக்கின்றனர், அமைச்சர்கள்.அ.தி.மு.க., கையில் உள்ள கூட்டணி பட்டியலில், தே.மு.தி.க.,வுக்கு மூன்றாவது இடம். முந்தைய இடத்தில் இருக்கும், பா.ம.க., - பா.ஜ.,வை பார்த்து விட்டு, கோயம்பேடு பக்கம் போகலாம் என்பது, ஆளும் தரப்பின் நினைப்பு. அவகாசம் குறைவாக இருப்பதால், அவசர அவசரமாக
அமைச்சர்கள், வேலுமணி, தங்கமணி, துணை ஒருங்கிணைப்பாளர், முனுசாமி, பிரேமலதா,விஜயகாந்த், அ.தி.மு.க.,தே.மு.தி.க.,

கூட்டணி பேச வந்த அமைச்சர்களுக்கு, விஜயகாந்த் மனைவி பிரேமலதா அதிர்ச்சி அளிக்க, அதை விட பெரிய அதிர்ச்சியை தந்திருக்கின்றனர், அமைச்சர்கள்.

அ.தி.மு.க., கையில் உள்ள கூட்டணி பட்டியலில், தே.மு.தி.க.,வுக்கு மூன்றாவது இடம். முந்தைய இடத்தில் இருக்கும், பா.ம.க., - பா.ஜ.,வை பார்த்து விட்டு, கோயம்பேடு பக்கம் போகலாம் என்பது, ஆளும் தரப்பின் நினைப்பு. அவகாசம் குறைவாக இருப்பதால், அவசர அவசரமாக பேச்சு நடத்தி வருகிறது, ஆளும் தலைமை. கேப்டன் வீட்டுக்கு தகவல் அனுப்பி, பதிலுக்காக காத்திருந்தது. அந்த நேரத்தில், கள்ளக்குறிச்சியில் கட்சி நிகழ்ச்சியில் இருந்திருக்கிறார், பிரேமலதா.

அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணியுடன், துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமியும் தயாராக இருப்பதாகவும், சந்திப்பை எங்கே வைத்துக் கொள்ளலாம் என்றும், அவரிடம் கேட்கப்பட்டது. பல தடவை, 'எங்களை அழைத்து பேசுங்கள்' என, வெளிப்படையாக அழைப்பு விடுத்திருந்தார், பிரேமலதா. எந்த ரியாக் ஷனும் இல்லாமல் இருந்ததால், ஆளும் கட்சி மீது காட்டம். மூன்றாவது இடத்தில் வைத்ததால், கடும் கோபம். 'கட்சி நிகழ்ச்சியில் இருப்பதால், உடனே வர முடியாது' என்றிருக்கிறார்.

அடுத்த சில நிமிடங்களில், சுதீஷிடம் இருந்து போன். 'ராமதாசை பல தடவை சந்திச்ச நீங்க, கேப்டனை ஏன் சந்திக்கல' என, கேட்டிருக்கிறார். அம்மையாருக்கு அதான் கோபம் என்பது, அப்புறம் தான் அமைச்சர்களுக்கு புரிந்தது.விஜயகாந்த் வீட்டிற்கு சென்று, அவரை அமைச்சர்கள் சந்தித்தனர். விஜயகாந்த் ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்தார். பேச வேண்டியது, பிரேமலதாவிடம் தான் என, அமைச்சர்கள் சுதாரித்து கொண்டனர்.

போனில் பேசிய பிரேமலதாவோ, 'வட மாவட்டங்களில் தான், ராமதாசுக்கு ஓட்டு. திருச்சியை தாண்டினா, அவங்க ஆட்களை லென்ஸ் வெச்சு தான் தேடணும். எங்களுக்கு அப்படி இல்ல. ஊருக்கு ஊர் கிளை இருக்கு. அதனால, 25 வேணும். ஒத்துக்கிட்டா பேச்சு' என, ஒரே அடியா போட்டாராம். ஆடிப்போன அமைச்சர்கள், '10, இல்லேன்னா, கூட ஒண்ணு ரெண்டு சேர்த்து தர்றோம்...' என, அதிர்ச்சி பதில் தந்துவிட்டு, காரை நோக்கி நடந்துள்ளனர்.


Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X