கடலுார்: புதுச்சேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக, மக்கள் நீதி மய்யம் சார்பில் கொண்டு வரப்பட்ட பரிசு பொருட்களை, கடலுார் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தமிழகம், புதுச்சேரியில் வரும் ஏப்., 6ம் தேதி, சட்டசபை பொதுத்தேர்தல் நடக்கிறது. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை கண்காணிக்க, வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் அடங்கிய தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள், வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை, கடலுார்அடுத்த பெரியகாட்டுப்பாளையத்தில், தாசில்தார் விஜயா தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை செய்தனர்.
புதுச்சேரியில் இருந்து வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்ததில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னம் அச்சிடப்பட்ட பனியன்கள், சில்வர் பாத்திரங்கள் இருப்பது தெரிந்தது.இவற்றை, புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு சென்றனர். 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அந்த பொருட்களை பறிமுதல் செய்து, கடலுார் தாலுகா அலுவலக குடோனில் வைத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE