அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெரியகருப்பன் கிடா விருந்து: காது குத்து என ' காது குத்து'

Updated : மார் 02, 2021 | Added : பிப் 28, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சிவகங்கை:தி.மு.க., - எம்.எல்.ஏ., பெரியகருப்பன், கிடா வெட்டி கட்சியினருக்கு தேர்தல் விருந்து அளித்தார்.சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் தொகுதியில், தொடர்ந்து மூன்று முறை, வெற்றி பெற்ற பெரியகருப்பன், தேர்தலுக்கு முன்பாக, இப்பகுதியில் உள்ள கோவில், தர்காவில் வழிபாடு நடத்தி விருந்து கொடுப்பார்.தற்போது, சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அவரே
 பெரியகருப்பன், கிடா விருந்து, காது குத்து,

சிவகங்கை:தி.மு.க., - எம்.எல்.ஏ., பெரியகருப்பன், கிடா வெட்டி கட்சியினருக்கு தேர்தல் விருந்து அளித்தார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் தொகுதியில், தொடர்ந்து மூன்று முறை, வெற்றி பெற்ற பெரியகருப்பன், தேர்தலுக்கு முன்பாக, இப்பகுதியில் உள்ள கோவில், தர்காவில் வழிபாடு நடத்தி விருந்து கொடுப்பார்.தற்போது, சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அவரே வேட்பாளராக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து, சிங்கம்புணரி அருகே, பிரான்மலை அடிவாரத்தில், புதுக்கோட்டை மாவட்ட எல்கையில் உள்ள, அழகுசொக்கர் கோவில் வளாகத்தில், நேற்று கிடா வெட்டி, கட்சியினருக்கு விருந்து அளித்தார். இதில் சிங்கம்புணரி,எஸ்.புதுார், திருப்புத்துார் பகுதியை சேர்ந்த கட்சியினர் பங்கேற்றனர். கட்சியினருடன் பெரியகருப்பனும் அமர்ந்து உணவருந்தினார். தேர்தல் நடத்தை விதிகள் அமலாகியுள்ள நிலையில், விதிகளை மீறி, விருந்து வைத்த சம்பவம், அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும், 'கறி விருந்து குறித்து, எங்களுக்கு எதுவும் தெரியாது; அது நம் மாவட்ட எல்லையிலும் நடக்கவில்லை' என மழுப்பினர்.

இது குறித்து, பெரியகருப்பனிடம் கேட்டபோது, ''எனக்கு எதுவும் தெரியாது; கூப்பிட்டனர், வந்தேன்,'' எனக் கூறி, ஒன்றிய நிர்வாகி ஒருவரை அழைத்து, ''ஏதோ கேட்கின்றனர், பதில் சொல்லுங்கள்,'' என்றார். அதற்கு அவர், 'என் பேர பிள்ளைகளுக்கு காது குத்து நடத்தி, விருந்து வைக்கிறோம்' என்றார்.ஆனால், 'அந்த இடத்தில் சாப்பிட வந்த கட்சியினர் தவிர்த்து, காதுகுத்து குழந்தைகள், பெண்கள் யாரும் இல்லையே' எனக் கேட்டதற்கு, சிரித்து மழுப்பினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nachiar - toronto,கனடா
03-மார்-202119:21:15 IST Report Abuse
Nachiar முழு ஹசன் குடும்பமே பணத்தை வாங்கி சமயம் மாறின குடும்பம். இவன் எல்லாம் ஒரு தலைவன் எங்கே போகிறது தமிழகம்?
Rate this:
Cancel
01-மார்-202122:53:10 IST Report Abuse
kulandhai Kannan விருந்தில் வாழைபழம் கொடுத்திருப்பாரே??
Rate this:
Cancel
01-மார்-202113:06:03 IST Report Abuse
ஆரூர் ரங் காதுகுத்து வாக்காளர்களுக்கா இருக்கும்🤣😜
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X