சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடிகார கணவனை தீ வைத்து கொன்ற மனைவி

Added : பிப் 28, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவையை அடுத்த முனுசுவலசையில் குடிகார கணவனின் டார்ச்சர் தாங்காமல் அவரை வீட்டுக்குள் பூட்டி வீட்டிற்கு தீ வைத்து கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.முனுசுவலசையை சேர்ந்தவர் முனியசாமி 40. மனைவி மல்லிகா 32. இவர்களுக்கு காயத்ரி 4, கபிலன் 2, என்ற குழந்தைகள் உள்ளனர். கை ஊனமுற்ற நிலையில் வேலைக்கு செல்லாத முனியசாமி குடிக்கும்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவையை அடுத்த முனுசுவலசையில் குடிகார கணவனின் டார்ச்சர் தாங்காமல் அவரை வீட்டுக்குள் பூட்டி வீட்டிற்கு தீ வைத்து கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

முனுசுவலசையை சேர்ந்தவர் முனியசாமி 40. மனைவி மல்லிகா 32. இவர்களுக்கு காயத்ரி 4, கபிலன் 2, என்ற குழந்தைகள் உள்ளனர். கை ஊனமுற்ற நிலையில் வேலைக்கு செல்லாத முனியசாமி குடிக்கும் அடிமையாகியிருந்தார்.சித்தாள் வேலைக்கு சென்று மல்லிகா சம்பாதிக்கும் பணத்தையும் வாங்கி குடித்தார். மல்லிகாவை அடித்து துன்புறுத்தினார்.நேற்று முன்தினம் நள்ளிரவும் கணவன் -மனைவி இடையே சண்டை ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த மல்லிகா குடிபோதையில் இருந்த முனியசாமியை குடிசை வீட்டிற்குள் வைத்து பூட்டினார். குடிசைக்கு தீ வைத்துவிட்டு குழந்தைகளுடன் சென்றுவிட்டார்.முனியசாமி வீட்டிற்குள் உடல் கருகி பலியானார். கேணிக்கரை போலீசார் மல்லிகாவை கைது செய்தனர். போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கணவரின் டார்ச்சர் தாங்க முடியாமல் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X