சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எருது விடும் விழாவில் போலீசார் தடியடி

Added : பிப் 28, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர் அருகே நடந்த எருது விடும் விழாவில் தகராறு ஏற்பட்டதால், இன்ஸ்பெக்டர் தடியடி நடத்தினார். கல்வீச்சில், அவர் காயமடைந்தார்.தமிழக எல்லையில் உள்ள கக்கனுாரில், பாரம்பரிய எருது விடும் விழா நேற்று நடந்தது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், வாய்மொழியாக அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தமிழகம் மட்டுமின்றி, கர்நாடக மாநிலத்தில் இருந்தும், 300க்கும் மேற்பட்ட

ஓசூர்: ஓசூர் அருகே நடந்த எருது விடும் விழாவில் தகராறு ஏற்பட்டதால், இன்ஸ்பெக்டர் தடியடி நடத்தினார். கல்வீச்சில், அவர் காயமடைந்தார்.

தமிழக எல்லையில் உள்ள கக்கனுாரில், பாரம்பரிய எருது விடும் விழா நேற்று நடந்தது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், வாய்மொழியாக அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தமிழகம் மட்டுமின்றி, கர்நாடக மாநிலத்தில் இருந்தும், 300க்கும் மேற்பட்ட காளைகள் வந்திருந்தன.விழாவை காண, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டதால், பாகலுார் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். விழா திடலில், காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில், இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கூட்டத்தை கலைக்க, பாகலுார் இன்ஸ்பெக்டர் பழனிசாமி, லேசான தடியடி நடத்தினார். உடனே, அங்கு திரண்டிருந்த கூட்டத்தினர், இன்ஸ்பெக்டரை சூழ்ந்து கொண்டனர். விழா திடலில் நிறுத்திய லாரியை எடுக்குமாறு, இன்ஸ்பெக்டர் கூறியபோது, லாரியில் இருந்த வாலிபர்களில் ஒருவர், கல்லை எடுத்து, இன்ஸ்பெக்டர் மீது வீசியதில், அவருக்கு மண்டை உடைந்து, ரத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. எருது விடும் விழா, பாதியில் நிறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X