அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மோடி முன் கைகட்டி நிற்கும் முதல்வர்' : ராகுல்

Updated : மார் 01, 2021 | Added : மார் 01, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
திருநெல்வேலி: ''தமிழக முதல்வர் ஊழல்வாதி என்பதால் தான், பிரதமர் மோடி முன் கைகட்டி, தலைகுனிந்து நிற்கிறார்,'' என, காங்., முன்னாள் தலைவர் ராகுல் பேசினார்.தமிழகத்தின் தென் மாவட்டங்களில், மூன்று நாள் சுற்றுப்பயணாக, காங்., முன்னாள் தலைவர் ராகுல் நேற்று முன்தினம் துாத்துக்குடி வந்தார். 'டிவி' பெட்டிஅங்கு பிரசாரத்தில் ஈடுபட்டவர், நேற்று இரண்டாவது நாளாக, தென்காசி
 'மோடி முன் கைகட்டி நிற்கும் முதல்வர்' : ராகுல்

திருநெல்வேலி: ''தமிழக முதல்வர் ஊழல்வாதி என்பதால் தான், பிரதமர் மோடி முன் கைகட்டி, தலைகுனிந்து நிற்கிறார்,'' என, காங்., முன்னாள் தலைவர் ராகுல் பேசினார்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில், மூன்று நாள் சுற்றுப்பயணாக, காங்., முன்னாள் தலைவர் ராகுல் நேற்று முன்தினம் துாத்துக்குடி வந்தார். 'டிவி' பெட்டிஅங்கு பிரசாரத்தில் ஈடுபட்டவர், நேற்று இரண்டாவது நாளாக, தென்காசி மாவட்டம், ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டையில் பேசியதாவது:மோடி அரசில் சிறு, குறு தொழில்கள் நலிவடைந்துள்ளன. மோடிக்கு தமிழ் மொழி, கலாசாரம் குறித்து தெரியவில்லை. அவருக்கு தெரிந்ததெல்லாம் ஒரே மொழி, ஒரே கலாசாரம் தான்.பல்வேறு கலாசாரங்களை கொண்டது தான் இந்தியா. அனைத்து மொழி, கலாசாரத்தையும் மதிக்க வேண்டும்.

காலையில் எழும் மோடி, தொலைக்காட்சியில் தன் முகத்தை மட்டும் பார்த்து மகிழ்வதால், மிகுந்த குழப்பத்தில் உள்ளார்.தமிழக அரசையும், 'டிவி' பெட்டியாக கருதுகிறார். 'ரிமோட்'டை கையில் வைத்து சத்தத்தை கூட்டி, குறைப்பதை போல், தமிழக முதல்வரின் சத்தத்தை குறைக்கிறார். சி.பி.ஐ., உள்ளிட்ட அமைப்புகள் மோடியிடம் இருப்பதால், ஊழல்வாதியான தமிழக முதல்வர் அச்சப்படுகிறார்.தமிழக முதல்வரிடம் இருந்து, எதிர்ப்பு குரல் எதுவும் வராது என மோடிக்கு தெரியும். மோடிக்கு முன் கைகட்டி, தலைகுனிந்து நிற்பதை, தமிழக முதல்வர் விட்டுவிட்டு மக்கள் முன் செயல்பட வேண்டும்.இவ்வாறு, ராகுல் பேசினார்.

மோடியை விரட்டுவோம்முன்னதாக நேற்று காலை, பாளையங்கோட்டை துாய சவேரியார் கல்லுாரியில், பேராசிரியர்களுடன் ராகுல் கலந்துரையாடினார்.அப்போது, ராகுல் பேசியதாவது:மத்திய அரசு, ஹிந்து மதத்தை முன்னிலைப்படுத்தி செயலாற்றுகிறது. ஆனால், மக்களை துன்புறுத்துங்கள், கொலை செய்யுங்கள் என ஹிந்து மதத்தில் எங்கேயும் கூறப்படவில்லை.ஆட்சி மாற்றத்திற்காக தான், மக்களை சந்திக்க வந்துள்ளேன்.

நானும் நீங்களும் இணைந்தால், நிச்சயம் நடக்கும். நம் கனவுகள் மிகப்பெரியவையாக இருக்க வேண்டும். மோடி அரசு, நம் மீது எத்தகைய தாக்குதலை நடத்தினாலும், அவதுாறுகள் செய்தாலும் பரவாயில்லை.வன்முறையில்லாமல் அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைப்போம். 70 ஆண்டுகளுக்கு முன் ஆட்சி செய்த பலம் வாய்ந்த ஆங்கிலேயர்களை விரட்டியது போல், மக்கள் நினைத்தால், மோடியையும் நாக்பூருக்கு அனுப்ப முடியும்.இவ்வாறு, அவர் பேசினார்.அப்போது, 'கொரோனா காலத்தில் ஊதியம் கிடைக்கவில்லை. பேராசிரியர் நியமனத்தில் லட்சக்கணக்கில் பணம் வாங்குகின்றனர்' என பல்கலைக்கழக செனட், சிண்டிகேட் கூட்டங்களில் பேசுவதை போல பேசி, பேராசிரியர்கள் போரடித்தனர்.நெல்லையப்பர் கோவில்திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு நேற்று காலை, 11:38 மணிக்கு சென்ற ராகுலுக்கு, திருநீறு பூசி மேளதாளம் முழங்க வரவேற்பு வழங்கப்பட்டது.

ராகுல் சார்பில் வழங்கப்பட்ட பச்சை வண்ண பட்டுப்புடவை அணிந்திருந்த காந்திமதியம்மனை அவர் தரிசித்தார். சங்கிலி மண்டபம் பிரமாண்ட யாழி சிலை குறித்து கேட்டறிந்து, நெல்லையப்பர் சன்னிதிக்கு சென்றார். கோவில் பேஸ்கார் முருகேசன், இசைத் துாண்களை இசைத்து காண்பித்தார். துாண்களில் வித்தியாசமான ஓசை எழுந்ததை வியப்புடன் ரசித்த ராகுல், 'சூப்பர்' என்றார்.நெல்லையப்பர் சன்னிதியில் ராகுல் பெயருடன் கேட்டை நட்சத்திரம், தத்தாத்ரேய கோத்திரம் சொல்லி, அர்ச்சனை செய்யப்பட்டது. ராகுலுக்கு மாலை அணிவித்து, பட்டு பரிவட்டம் கட்டி மரியாதை செய்தனர்.நெல்லை கோவிந்தன் எனும் கிடந்தநிலை பெருமாளையும் வணங்கினார். ஹிந்தி தெரிந்த ரவிபட்டர் கோவிலின் தொன்மை, தல வரலாற்றை ராகுலுக்கு விளக்கினார். நேற்று முன்தினம், துாத்துக்குடி மாவட்டம், நாசரேத் செயின்ட் ஜான்ஸ் சர்ச்சில் ராகுல் பிரார்த்தனை செய்தார்.இளநீர் வியாபாரிக்கு ரூ.500ஆலங்குளம் செல்லும் வழியில், ரோட்டோர கடையில் நிர்வாகிகளுடன், ராகுல் இளநீர் குடித்தார். இளநீரை அரிவாளால் சீவிக்காட்ட கூறி ஆர்வத்துடன் பார்த்தவர், 'வியாபாரம் எப்படி உள்ளது' என கேட்டறிந்து வியாபாரிக்கு, 500 ரூபாய் கொடுத்தார்.

அடைக்கலபட்டணத்தில் ரோட்டோர கடையில் டீ குடித்து, கடைக்காரர் விருப்பப்படி அவருடன் ராகுல் புகைப்படம் எடுத்து கொண்டார்.தென்காசி மாவட்டம், புளியங்குடியில் சிறு தொழில் புரிவோருடன் ராகுல் கலந்துரையாடினார். அப்போது பீடி சுற்றும் பெண் ஒருவர், 'ஆண்களின் குடிப்பழக்கத்தால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். என் கணவராலும், மாமனாராலும் பிரச்னை ஏற்படுகிறது' என்றார்.இதை கேட்ட ராகுல், ''இதுபற்றி இங்கே பேசுவது உங்கள் கணவருக்கு தெரியுமா. பிரச்னை வராதா,'' என வினவியதோடு, ''குடிப்பழக்கத்திற்கு எதிராக பேசுகையில் பெண்களிடம் இருந்து கைத்தட்டல் வருகிறது. ஆண்களிடம் சத்தமே இல்லையே,'' என கமென்ட் அடித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரெட்டை வாலு ரெங்குடு - ரெட்டேரி ,இந்தியா
01-மார்-202121:10:15 IST Report Abuse
ரெட்டை வாலு ரெங்குடு இவ்வளவு வாய் கிழிய பேசுற ராவுளு உங்க கட்சியலியே இருந்த அறிஞர் பி வி நரசிம்மராவ் அவர்களுக்கு உயிரோடு இருந்தபோதும் உயிர் பிரிந்தபோதும் நீங்களும் உங்க குடும்பமும் எவ்வளவு மரியாதை கொடுத்தீர்கள் என சுயபரிசோதனை செய்துகொள்ளவும்.. இன்னொருத்தரை பார்த்து சுலபமா பேசிவிடலாம் ஏன் என்றால் பழைய விஷயங்கள் எல்லோர்க்கும் மறந்து இருக்கும் இந்நேரம் என மனப்பால் குடித்தீர்கள் என்றால் .. சாரி சார்.. உங்க அயோக்கியத்தனம் எங்களுக்கு அத்துப்பிடி.. சொல்லவேண்டியதை தக்க தருணத்தில் அவுத்து விடுவோம்..ஜாக்கிரதை
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
01-மார்-202118:52:36 IST Report Abuse
bal உன் முன்னாடி மண்டியிட்டு நிற்கும் வயதான இருபத்தி மூன்று மூத்த காங்கிரஸ் தலைவர்கள்...நீ என்ன செய்தாய் கட்சிக்கு.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
01-மார்-202118:39:08 IST Report Abuse
Girija காங்கிரஸ் பிரதமர்கள் எவ்வளவு பணிவானவர் என்று மக்களுக்கு தெரியும் உங்க அப்பா ஆந்திர முதல்வர் அஞ்சையவை பளார் என்று கன்னத்தில் அறைந்தது ? சக்கர நாற்காலியில் அமர்ந்து மணிக்கணக்காக காத்திருந்தார் கருணாநிதி உங்க அன்னையை சந்திக்க, இலங்கை போர் நிறுத்தத்திற்கு அல்ல 2 ஜி யில் இருந்து மகளை காப்பாற்ற
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X