சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நீரில் மூழ்கி மாணவி உயிரிழப்பு

Added : மார் 01, 2021
Share
Advertisement
பவானி: திருப்பூர், கதிர் லே அவுட், காங்கேயம் பிரதான சாலையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்வகணபதி, 45; மனைவி செல்வி, 42. மகள் காயத்ரி, 21; தனியார் கல்லுாரி மாணவி. இளைய மகள் அனுஸ்ரீ, 17; பிளஸ் ௧ மாணவி.சேலம் மாவட்டம், ஆத்துார், உடையார் பாளையத்தில் உள்ள உறவினர் திருமணத்துக்கு, ஆட்டோவில் நான்கு பேரும் சென்றனர். ஈரோடு மாவட்டம், நசியனுார் வழியே கீழ்பவானி வாய்க்கால் செல்கிறது. கரைகளை

பவானி: திருப்பூர், கதிர் லே அவுட், காங்கேயம் பிரதான சாலையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்வகணபதி, 45; மனைவி செல்வி, 42. மகள் காயத்ரி, 21; தனியார் கல்லுாரி மாணவி. இளைய மகள் அனுஸ்ரீ, 17; பிளஸ் ௧ மாணவி.சேலம் மாவட்டம், ஆத்துார், உடையார் பாளையத்தில் உள்ள உறவினர் திருமணத்துக்கு, ஆட்டோவில் நான்கு பேரும் சென்றனர். ஈரோடு மாவட்டம், நசியனுார் வழியே கீழ்பவானி வாய்க்கால் செல்கிறது. கரைகளை தொட்டபடி தண்ணீர் ஓடுகிறது. காலை, ௧௦:௦௦ மணியளவில் அவ்வழியே சென்றபோது, மகள்களுக்கு வாய்க்காலில் குளிக்கும் ஆசை வந்தது. ஆட்டோவை நிறுத்தி, வாய்க்காலில் இறங்கி குளித்த மகள்கள், ஆழமான பகுதிக்கு சென்றனர். நீச்சல் தெரியாத நிலையில், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். தம்பதி கூச்சலிடவே, அங்கு குளித்துக் கொண்டிருந்த, லாரி டிரைவர்கள் இருவரையும் காப்பாற்ற முயன்றனர்.இதில், காயத்ரி உயிருடன் மீட்கப்பட்டார். தண்ணீரை அதிகம் குடித்ததால், அனுஸ்ரீ இறந்து விட்டார். இதனிடையே மகள்களை காப்பாற்ற, செல்வகணபதியும் வாய்க்காலில் குதித்துள்ளார். அவரை காணவில்லை. பெருந்துறை தீயணைப்பு வீரர்கள், அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X