பொது செய்தி

தமிழ்நாடு

கிணறுகளை மீட்டு நிலத்தடி நீர் பெருக்கும் அற்புதம்:ராஜபாளையம் இளைஞர்களுக்கு 'சல்யூட்'

Updated : மார் 01, 2021 | Added : மார் 01, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
ராஜாளையம்:உலகம் முழுவதும் சுற்றுச்சூழலை காப்பாற்றுங்கள் என்ற உரத்த குரல் ஒலித்து வருகிறது. இயற்கை சீரழிவுகளில் வேகமெடுத்து செல்லும் போது இயற்கை வளங்களை மீட்டெடுக்கும் முயற்சியும் நடந்து வருவது ஆறுதலை அளிக்கிறது.ஆறு. கண்மாய் உள்ளிட்ட நீர் நிலைகளை அடுத்து வீடுகள் தோறும் கை கொடுத்து வந்தது கிணறுகள் தான். வீடுகள், குடியிருப்புகளில் கிணறுகள் அமைத்துஅதிலிருந்து
 கிணறுகளை மீட்டு நிலத்தடி நீர் பெருக்கும் அற்புதம்:ராஜபாளையம் இளைஞர்களுக்கு 'சல்யூட்'

ராஜாளையம்:உலகம் முழுவதும் சுற்றுச்சூழலை காப்பாற்றுங்கள் என்ற உரத்த குரல் ஒலித்து வருகிறது. இயற்கை சீரழிவுகளில் வேகமெடுத்து செல்லும் போது இயற்கை வளங்களை மீட்டெடுக்கும் முயற்சியும் நடந்து வருவது ஆறுதலை அளிக்கிறது.

ஆறு. கண்மாய் உள்ளிட்ட நீர் நிலைகளை அடுத்து வீடுகள் தோறும் கை கொடுத்து வந்தது கிணறுகள் தான். வீடுகள், குடியிருப்புகளில் கிணறுகள் அமைத்துஅதிலிருந்து அனைத்து தேவைகளுக்கும் நீர் பெற்று வந்தனர்.மக்கள் தொகை, குடியிருப்புகள் பெருக்கம் காரணமாக தண்ணீர் தேவை அதிகரித்தது.

போர்வெல்களின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்தது. நிலத்தடி நீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு இல்லை. இதனால் தண்ணீர் தேவை பல் மடங்கு அதிகரித்தது.இந்நிலையை மாற்றும் முயற்சியில் ராஜபாளையத்தில் பழையபாளையம் ராஜூக்கள் இளைஞர் சங்கம் முன்னெடுத்து வருகிறது.

சங்கத்தின் இளைஞர்கள் குடியிருப்பு பகுதிகளில்கைவிடப்பட்ட கிணறுகளை மீட்டெடுத்து நிலத்தடி நீர் சேமிக்கும் மையமாக மாற்றி வருகின்றனர்.சமூக சேவையில் ஈடுபட்டு வரும் இளைஞர்களின்பணியை பலரும் பாராட்டுகின்றனர்.


மீட்பதில் பெருமைஇளைஞர்கள் பலர் பயனுள்ள வகையில் நேரத்தை செலவிடுவதில்லை. நகராட்சி நிர்வாகம் ஒத்துழைப்புடன் சங்க இளைஞர்கள் நிலத்தடி நீர் மீட்டெடுப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக மூடப்பட்ட கிணறுகள், குப்பை கொட்டப்படும் பயனற்ற கிணறுகளை மீட்டு சுத்தம் செய்து மழை நீர் சேமிக்கும் மையமாக மாற்றி வருகின்றனர். இதனால் சுத்தமான குடிநீர் கிடைக்கிறது. நிலத்தடி நீர் மட்டம் பெருகும்.

விஜயராகவன், பழையபாளையம்

ராஜூக்கள் சமூக தலைவர்:


நிலத்தடி நீர் பெருகும்கைவிடப்பட்ட கிணறுகளை அடையாளம் கண்டு முறைப்படி அனுமதி பெற்று கிணறுகள் மீட்கப்படுகிறது. தெருக்களில் குப்பைகள் கொட்டுவதை தடுத்தல், குப்பை தொட்டியில் மட்டுமே குப்பையை கொட்ட வலியுறுத்துதல், பாதுகாப்பிற்காக சி.சி.டி.வி., கேமரா அமைப்பது, ஆதரவற்றோர்க்கு உணவு வழங்குவது, மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பது என சேவை பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
பாலாஜி, இளைஞர் சங்க ஊறுப்பினர்.இவர்களை வாழ்த்த 93452 07094 ஹலோ சொல்லலாம்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.BALAKRISHNAN - Rajapalayam,இந்தியா
02-மார்-202118:07:19 IST Report Abuse
K.BALAKRISHNAN வாழ்த்துக்கள் நண்பர்களே, இதே போல் நமது ஊரிலுள்ள நீர் ஆதாரமாக உள்ள அய்யனார் கோவில் அதன் ஆறு, குளங்கள் முடங்கி ஆறு, குதப்பாஞ்சான் ஆறு முதல் பெரிய கண்மாய், பிரண்டை குளம், புளியங்குளம், அப்பால் ராஜா ஊறணி, கடம்பன் குளம் இவைகளையும் கப்பார்த்தா வேண்டும், இவைகளும் கழிவுகள் கொட்டும் இடமாக உள்ளது. இந்த நீர் நமக்கு வாழ்க்கை ஆதாரமாகும். நானும் கடமை பட்டுள்ளேன் நமது சந்ததியினருக்காக.வாழ்க வளமுடன்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
02-மார்-202110:06:09 IST Report Abuse
Bhaskaran Vaalthukkal ovoru oorilum ithanai pol sangangal uruvaaganum
Rate this:
Cancel
Seena - Salem,ஐக்கிய அரபு நாடுகள்
01-மார்-202115:01:26 IST Report Abuse
Seena அற்புதம் ....அருமை...வாழ்த்துக்கள் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X