சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போதை பொருட்கள் பறிமுதல்

Added : மார் 01, 2021
Share
Advertisement
புதுச்சேரி: புதுச்சேரிக்கு, 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை கடத்தி வந்த கன்டெய்னர் லாரியை, போலீசார் பறிமுதல் செய்தனர்.புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் அறிவித்துள்ளதால், பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மொயிண்ட் தெரசா வீதி - பாரதி வீதி சந்திப்பில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 11:00 மணியளவில் பறக்கும் படையினர், வணிக வரித் துறை அதிகாரிகள்

புதுச்சேரி: புதுச்சேரிக்கு, 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை கடத்தி வந்த கன்டெய்னர் லாரியை, போலீசார் பறிமுதல் செய்தனர்.புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் அறிவித்துள்ளதால், பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மொயிண்ட் தெரசா வீதி - பாரதி வீதி சந்திப்பில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 11:00 மணியளவில் பறக்கும் படையினர், வணிக வரித் துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். பாரதி வீதி சந்திப்பில், கன்டெய்னர் லாரிகளில் இருந்த பொருட்களை, சிறிய லாரியில் தொழிலாளர்கள் மாற்றினர். சந்தேகமடைந்த வணிக வரித் துறை அதிகாரிகள், பார்சலை பிரித்து போது, அதில் ஒரு குட்கா பாக்கெட் இருந்தது.தொடர் சோதனையில், லாரியின் மேல் பகுதியில் பூஜாடி, நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. அதை அகற்றிய போது அடியில், 60 மூட்டைகள் இருந்தன. அவற்றை சோதனையிட்டபோது, அந்த மூட்டைகளில் குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தன.மொத்தம், 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 60 மூட்டை போதை பொருட்களை, போலீசார் பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டம், அருப்புகோட்டையைச் சேர்ந்த லாரி டிரைவர் குகன்குமார் என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X