பொது செய்தி

இந்தியா

18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை: நெடுஞ்சாலை ஆணையம் உலக சாதனை

Updated : மார் 01, 2021 | Added : மார் 01, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
புதுடில்லி: தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சமீபத்தில் மஹாராஷ்டிராவின் சோலாப்பூர், கர்நாடகாவின் விஜய்புரா இடையே செல்லும் என்.எச்., 52-ல் 25.54 கிலோ மீட்டருக்கு ஒற்றை வழி சாலை அமைத்து உலக சாதனை படைத்துள்ளது. இந்த சாலை ஆனது அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட பெங்களூரு - சித்ரதுர்கா - விஜய்புரா - சோலாபூர் - அவுரங்காபாத் - இந்தூர் - குவாலியர் சாலையின் ஒரு பகுதியாகும். அதில் தற்போது

புதுடில்லி: தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சமீபத்தில் மஹாராஷ்டிராவின் சோலாப்பூர், கர்நாடகாவின் விஜய்புரா இடையே செல்லும் என்.எச்., 52-ல் 25.54 கிலோ மீட்டருக்கு ஒற்றை வழி சாலை அமைத்து உலக சாதனை படைத்துள்ளது.



latest tamil news




இந்த சாலை ஆனது அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட பெங்களூரு - சித்ரதுர்கா - விஜய்புரா - சோலாபூர் - அவுரங்காபாத் - இந்தூர் - குவாலியர் சாலையின் ஒரு பகுதியாகும். அதில் தற்போது விஜய்புரா - சோலாபூர் இடையே 110 கி.மீக்கு நான்கு வழிச்சாலை அமைத்து வருகின்றனர். அக்டோபர் 2021-ல் இச்சாலைப் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர். அதில் உலக சாதனை முயற்சியாக 25.54 கி.மீ சாலையை 500 ஊழியர்கள் 18 மணி நேரத்தில் அமைத்துள்ளனர்.

இத்தகவலை நெடுஞ்சாலைகள் துறைக்கான மத்திய அமைச்சர் கட்கரி உறுதிப்படுத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “இந்த விரைவுப் பணி லிம்கா சாதனை புத்தகத்தில் சேர்க்கப்பட உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மற்றும் ஒப்பந்த நிறுவனத்தின் பணியாளர்கள், திட்ட இயக்குனர்கள், அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள்.” என கூறியுள்ளார்.


latest tamil news



கர்நாடக துணை முதல்வர் கோவிந்த் கர்ஜோலும் நெடுஞ்சாலை ஆணையத்தின் பணியை பாராட்டியுள்ளார். அவர் தனது அறிக்கையில் “இந்த அரிய சாதனை தற்போது செயல்பாட்டில் உள்ள திட்டங்களிலும், வரவிருக்கும் திட்டங்களிலும் பெஞ்ச்மார்க்காக அமையும். இந்த நெடுஞ்சாலை தென் இந்தியாவை வட இந்தியாவுடன் இணைக்கிறது. வடக்கு - தெற்குக்கு இது ஒரு மாற்று பாதையாக அமையும். இச்சாலை பயண நேரம், வாகனங்கள் இயக்க செலவை வெகுவாக குறைக்கும். மேலும் மஹா., கர்நாடக மாநிலங்களின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு உதவும்.” என கூறினார்

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
01-மார்-202121:22:39 IST Report Abuse
bal இருக்கும் ரோடுகள் பாலங்களை சரி செய்ய துப்பில்லை...நெடுஞ்சாலை எதற்கு.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
01-மார்-202117:06:56 IST Report Abuse
Endrum Indian அப்போ ஒன்னு பண்ணுங்க இங்கே கொல்கத்தா வந்து எங்க வீட்டுக்கும் பார்க்ஸ்ட்ரீட் க்கும் 8.2 கி.மி தூரப்பாதை ராத்திரியோடு ராத்திரிய வந்து சட்டு புட்டுன்னு ஒரு ரோட்டை போட்டு கொடுங்க அச்ச அசலாக ஈ சி ஜி க்ராப் மாதிரி இருக்கு அந்த சாலை நல்ல எக்ஸ்ர்சிஸ் மாதிரி இருக்கு குலுங்கி குலுங்கி கார் ஓட்டும் போது
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
01-மார்-202112:19:44 IST Report Abuse
Natarajan Ramanathan மதுரையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சாலை போடும் திட்டம் ஊழல் காங்கிரஸ் ஆட்சியால் சுமார் ஐம்பது ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு இப்போதுதான் மிக விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சாலையும் நல்ல தரத்தில் இருக்கிறது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X