தமிழ்நாடு

வாக்காளருக்கு கொடுக்க பணம் பதுக்கலா?தேர்தல் பார்வையாளர், விரைவார் உடனே: தகவல் தெரிந்தவுடன் அதிரடி காட்ட தயார்

Updated : மார் 01, 2021 | Added : மார் 01, 2021
Share
Advertisement
திருப்பூர்:''வாக்காளருக்கு வினியோகிக்க பணம் பதுக்கி வைத்துள்ளதாக தகவல் கிடைத்தால், போலீசுடன் சென்று, கட்டடத்திற்கு வெளியே நிற்க வேண்டும்; உள்ளே போகக்கூடாது. தேர்தல் பார்வையாளர் மற்றும் வருமானவரித்துறைக்கு தகவல் கொடுக்க வேண் டும். அவர்கள் உடனடியாக விரைந்து அங்கு வந்து, நடவடிக்கை மேற்கொள்வர்'' என்றுதேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.தேர்தல் பணி
வாக்காளருக்கு கொடுக்க பணம் பதுக்கலா?தேர்தல் பார்வையாளர், விரைவார் உடனே: தகவல் தெரிந்தவுடன் அதிரடி காட்ட தயார்

திருப்பூர்:''வாக்காளருக்கு வினியோகிக்க பணம் பதுக்கி வைத்துள்ளதாக தகவல் கிடைத்தால், போலீசுடன் சென்று, கட்டடத்திற்கு வெளியே நிற்க வேண்டும்; உள்ளே போகக்கூடாது. தேர்தல் பார்வையாளர் மற்றும் வருமானவரித்துறைக்கு தகவல் கொடுக்க வேண் டும். அவர்கள் உடனடியாக விரைந்து அங்கு வந்து, நடவடிக்கை மேற்கொள்வர்'' என்றுதேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தேர்தல் பணி மற்றும் வாகன சோதனை தொடர்பான ஆலோசனை கூட் டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை வகித்து பேசுகையில், ''கட்சி கொடிக்கம்பம் அகற்றுவது, கட்சி தலைவர் படங்களை மறைப்பது போன்ற பணிகளை விரைந்து செய்ய வேண்டும். மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு (தொடர்பு எண்: 1950) வரும் புகார் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமலாக்குவதில், தேர்தல் அலுவலர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். கூடுதல் சாவடிகள் உட்பட, ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதி செய்யப்பட்டுள்ளதை, உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்'' என்றார்.தேர்தல் பிரிவு தாசில்தார் ரவீந்திரன் தலைமையிலான குழுவினர் கூறியதாவது:வாக்காளருக்கு பணம் மற்றும் பரிசு கொடுப்பதை தடுப்பது, வாகன சோதனை நடத்தி, பணம், மது மற்றும் பரிசு பொருள் எடுத்துச்செல்வதை தடுப்பது போன்ற பணியை, பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் மேற்கொள்ளும். பறிமுதல் செய்யும் பணம், பொருட்களுக்கு உரிய ரசீது வழங்கப்பட வேண்டும்.ஆவணமின்றி எடுத்துச்செல்லப்படும், 50 ஆயிரம் ரூபாய்; 10 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக எடுத்துச்சென்றால், வருமானவரித்துறைக்கு தகவல் அளிக்கப்படும்.
வாக்காளருக்கு வினியோகிக்க பணம் பதுக்கி வைத்துள்ளதாக தகவல் கிடைத்தால், போலீசுடன் சென்று, கட்டடத்திற்கு வெளியே நிற்க வேண்டும்; உள்ளே போகக்கூடாது. தேர்தல் பார்வையாளர் மற்றும் வருமானவரித்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். அவர்கள் உடனடியாக விரைந்து அங்கு வந்து, நடவடிக்கை மேற்கொள்வர்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு), மாவட்ட கருவூல அலுவலர் அடங்கிய குழு, ஆவணங்களை சரிபார்த்து, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பறிமுதல் செய்யும் பொருள் மற்றும் பணத்தை விடுவிக்கும். முறைகேடாக எடுத்துச் செல்லும் பணம் அரசு கருவூலத்தில் சேர்க்கப்படும்.இவ்வாறு குழுவினர் கூறினர். டி.ஆர்.ஓ., சரவணமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன் சங்கர்ராஜ் உள்ளிட்டோர், தேர்தல் பணி குறித்து பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X