பொது செய்தி

தமிழ்நாடு

கோவில்களால் கொரோனாவிலிருந்து மீண்டனர்: கவர்னர் தமிழிசை

Updated : மார் 01, 2021 | Added : மார் 01, 2021 | கருத்துகள் (53)
Share
Advertisement
நாகர்கோவில்: ''இந்தியாவில் மூலைக்கு மூலை கோயில்கள் இருப்பதால் தான் வெளிநாட்டினர் வியக்கும் அளவு நாம் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளோம்'' என ஹிந்து சமய மாநாட்டில் கவர்னர் தமிழிசை பேசினார்.கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழாவை முன்னிட்டு ஹிந்து சேவா சங்கம் சார்பில் நடந்த 84வது சமய மாநாட்டை குத்து விளக்கேற்றி துவக்கி

நாகர்கோவில்: ''இந்தியாவில் மூலைக்கு மூலை கோயில்கள் இருப்பதால் தான் வெளிநாட்டினர் வியக்கும் அளவு நாம் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளோம்'' என ஹிந்து சமய மாநாட்டில் கவர்னர் தமிழிசை பேசினார்.



latest tamil news


கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழாவை முன்னிட்டு ஹிந்து சேவா சங்கம் சார்பில் நடந்த 84வது சமய மாநாட்டை குத்து விளக்கேற்றி துவக்கி தெலுங்கானா கவர்னர் தமிழிசை பேசியதாவது:ஆண்டுதோறும் இந்த விழாவில் கலந்து கொள்வது எனக்கு அன்னை தந்த வரமாகும். நான் ஒரு எம்.எல்.ஏ., அமைச்சர் ஆக வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் இன்று எம்.எல்.ஏ., அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் ஆட்சி பணியை எனக்கு அன்னை தந்துள்ளார்.


latest tamil news


கொரோனாவால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கட்டாயமாக முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட வேண்டும்.அமெரிக்கா, கனடாவில் மூலைக்கு மூலை மருத்துவமனைகள் உள்ள நிலையில் இந்தியாவில் கோயில்கள் இருக்கின்றன.

சிவன் கோயிலில் வில்வ இலை, விஷ்ணு கோயிலில் துளசி இலைகளால் பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்தது. இதனால் தான் வெளிநாடுகள் வியக்கும் வகையில் கொரோனாவில் இருந்து நாம் மீண்டு வந்துள்ளோம்.கொரோனாவை எதிர்க்கும் மருந்து இந்தியாவில் தயாரிக்கப்படுவது உலக அரங்கில் நமக்கு பெருமை சேர்த்துள்ளது. நம் தடுப்பூசியை வாங்க 50 வெளிநாடுகள் காத்திருக்கிறது என்பது இந்தியா மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா
01-மார்-202121:48:07 IST Report Abuse
திராவிஷ கிருமி ஜெபக்கூட்டம் நடத்தும் டூபாக்கூர்களை நம்பும் பகுத்தறிவாளர்கள் இதை ஒப்புக்கொள்ளமாட்டார்கள்...
Rate this:
Cancel
Suman - Mayiladuthurai ,இந்தியா
01-மார்-202121:15:09 IST Report Abuse
Suman உண்மையை சொல்லி இருக்கிறார்...பகுத்தறிவாளர்களுக்கும் நன்கு புரியும்...திடீர் தமிழர்களுக்கு புரிவது கடினம் ...சிவ சிவ..நன்றி.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
01-மார்-202120:23:08 IST Report Abuse
Rajagopal கோயிலுங்க முன்னால பெரியார் செலைய வச்சிருக்காங்க இல்ல? எல்லா கிருமியும் பெரியார் செலைக்கு மேல போயி படிஞ்சிருச்சுங்க. பெரியார் செலைங்களுக்கு கிருமீங்கள ஈர்க்கிற சக்தி உண்டு. திராவிட கிருமிலேந்து எல்லா கிருமியும் அதுலதான் வசிக்குது. இனிமே கொரோனாவ தடுக்கணும்னா ஊர் பூரா பெரியார் செலையா வச்சிருங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X