புதுடில்லி: தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்க சட்டசபைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஆட்சியைத் தக்க வைக்கவும், மேற்கு வங்கத்தில் மீண்டும் ஆட்சியை அமைக்கும் முயற்சியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் முனைந்துள்ளன.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்துள்ளது.இங்கு, காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய ஜனநாயகக் கட்சியுடன் தான், இந்தக் கூட்டணிக்கு போட்டி உள்ளது.அதே நேரத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ள மேற்கு வங்கத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும், காங்கிரசும் கூட்டணி அமைத்துள்ளன. கடந்த, 2016 தேர்தலிலும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

அதே நேரத்தில், இந்திய கம்யூனிஸ்ட் - மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட், இந்தக் கூட்டணியில் இடம்பெறவில்லை. மேற்கு வங்கத்தில், கூட்டணி அமைத்தாலும், மார்க்சிஸ்ட் பிரசார கூட்டங்களில் பங்கேற்பதை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், அவரது சகோதரி பிரியங்கா தவிர்த்து வருகின்றனர். கேரளாவில், கம்யூனிஸ்டுக்கு எதிராக பிரசாரம் செய்துவிட்டு, இங்கு ஆதரவாக பிரசாரம் செய்வது தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்பதால், இணைந்து பிரசாரம் செய்ய, அவர்கள் விரும்பவில்லை என தெரிகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE