அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: யார் அப்பா வீட்டு பணம்?

Updated : மார் 01, 2021 | Added : மார் 01, 2021 | கருத்துகள் (93)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :சுப்பு.லட்சுமணன், சென்னையிலிருந்து எழுதுகிறார்:'விவசாயிகள், கூட்டுறவு வங்கியில் பெற்ற கடன், தள்ளுபடி செய்யப்படும்' என, தேர்தலை மனதில் நிறுத்தி, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்.கூட்டுறவு வங்கிகளில், அரசியல் செல்வாக்கு படைத்தோர், 'பினாமி' பெயரில், பல லட்சம் ரூபாய் கடனாக
ithu ungal idam, இது, உங்கள், இடம்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :சுப்பு.லட்சுமணன், சென்னையிலிருந்து எழுதுகிறார்:

'விவசாயிகள், கூட்டுறவு வங்கியில் பெற்ற கடன், தள்ளுபடி செய்யப்படும்' என, தேர்தலை மனதில் நிறுத்தி, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்.கூட்டுறவு வங்கிகளில், அரசியல் செல்வாக்கு படைத்தோர், 'பினாமி' பெயரில், பல லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளனர்.

அத்தொகையை, வேறு தொழில்களுக்கும், கந்து வட்டி விடுவதற்கும் பயன்படுத்தியுள்ளனர். இந்தக் கடன் தள்ளுபடி, அவர்களுக்கு தான் சந்தோஷத்தைத் தந்துள்ளது.தமிழகத்தைப் பொறுத்தவரையில், கடன் பெற்றவன் கில்லாடி; கடன் பெறாதவன் ஏமாளியா?பணத்தை திருப்பிச் செலுத்த முடியாது என அஞ்சி, கடன் பெறாத விவசாயிகளும்; கடனை திருப்பி செலுத்தியோரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அனைவருமே கடன் தள்ளுபடியை எதிர்பார்க்கின்றனர்.


latest tamil newsஇதை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், செய்வோம்' என்கிறார்.எல்லாம், அரசு பணம் தானே... அவருக்கு என்ன?மக்கள் கேட்காமலே, அ.தி.மு.க., தலைமையிலான தமிழக அரசு, ரேஷன்கார்டுதாரர்களுக்கு, தலா, 2,500 ரூபாய் வழங்கியது. பொங்கல் பரிசு என்ற பெயரில், அது, தேர்தலுக்காக வழங்கப்பட்டது என்பதை மறுக்க முடியாது.

ஊழல் செய்த, முன்னாள் முதல்வர் ஜெ.,க்கு, அரசு பணத்தில், 80 கோடி ரூபாயை செலவு செய்து, நினைவு மண்டபம் கட்டியுள்ளனர்.ஜெயலலிதாவின் விசுவாசி என்றால், அக்கட்சிப் பணத்தில் செய்ய வேண்டியது தானே. அவர்களிடம் இல்லாத பணமா?அரசு பணத்தை வீணடிப்பது குற்றம். நீதிமன்றம், தானே முன்வந்து, இதில் தலையிட வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (93)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bala somasekaran - Santiago,சிலி
02-மார்-202107:00:47 IST Report Abuse
bala somasekaran கரெக்ட்.... எல்லா இலவசங்களை நிறுத்தணும்... கஷ்டபட்டு உழைச்சு வாங்குற சம்பளத்துல பதிய வரி கட்டுர நமக்கு மேலும் மேலும் வரிய போடுவானுவ ... சோம்பேறி கூட்டத்துக்கும், ஜாதி மற்றும் வோட்டு அரசியலுக்காகவும் இலவசத்தை குடுப்பானுவ...
Rate this:
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
02-மார்-202101:07:05 IST Report Abuse
கைப்புள்ள மறுபடியும் சொல்லுறேன் அழியுங்கள் தி மு க, ஒழியுங்கள் தி மு க, கழியுங்கள் தி மு க. நீங்கள் கழியாதவரை உங்களை கழிய வைத்து கொண்டே இருக்கும் தி மு க. இதுக்கு மேல தெளிவா ஒரு பயலும் சொல்ல முடியாது. சொன்னா புரிஞ்சுக்கோங்க. கழியுங்கள் தி மு க.
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
02-மார்-202108:26:21 IST Report Abuse
தல புராணம்பொள்ளாச்சி பாலியல் கொடூரம், தூத்துக்குடி அப்பாவிகள் கொலை, இவை தான் மக்களின் மனதில் பயங்கரமாக தெரிகிறது.. இவனுங்க அடித்த கொடுஞ்சாலை கொள்ளை ரோட்டில் பாதாளங்கள் மேடுபள்ளமாக தெரிகிறது.. சிறுமழைக்கே வெள்ளம் பெருக்கெடுத்தோடும் அவலம், பொதுப்பிணி ஊழல் பூதாகாரமாக தெரிகிறது .. பெரும்கொள்ளை நோய் பெயர் சொல்லி குட்கா பாஸ்கர் அடித்த கொள்ளை கண்முன்னே நிற்கிறது.. பல்லாயிரம் கோடிகளில் கொள்ளையடித்து வலம் வரும் தற்குறி அமைச்சர்கள் திரும்பிய பக்கமெல்லாம் தெரிகிறார்கள், பாலகிருஷ்னராய் தவழ்ந்து, அட்டை போல ஊர்ந்து கூவத்தூரில் கூத்தடித்து நாற்காலியை கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும் பயனிஸ்ஸாமியின் வீரம் நிழலாடுகிறது, அவரு தலைமேல் சிபிஐ பாய காத்திருக்கும் 50,000 கோடிக்கு ஊழல் வழக்கு அண்ணாந்து பார்த்தா தெரியுது.. மலைமுழுங்கியை, மணல்கொள்ளையரை, தரும யுத்தரை கொள்ளிக்கட்டையை கூடவே வெச்சிக்கிட்டு சுத்துற கடுப்பு மூஞ்சிலே தெரிகிறது.. மூச்சுக்கு மூச்சு அம்ம்மான்னுட்டு, அது சாவுலே மருமம்ன்னுட்டு அதை இப்போ தருமர் அமுக்குற அதிர்ச்சி மக்கள் முகத்தில் தெரியுது.. கட்டி தொறக்குறதுக்கு முன்னேயே ஒடைஞ்சி விழுற பாலம், அணைக்கட்டு, கட்டிடம், ரோடு ன்னு ஊழல் வெட்டவெளிச்சமா தெரியுது.. பெட்ரோல் விலை பத்திக்கிட்டு எரியுது.. விலைவாசி விண்ணை முட்டி பறக்குது. தொழில் துறை தூங்குது.. மாற்றத்துக்கு மக்கள் மனம் ஏங்குது.....
Rate this:
Azhagan Azhagan - Chennai,இந்தியா
02-மார்-202111:36:57 IST Report Abuse
Azhagan Azhaganநீர்...
Rate this:
Cancel
01-மார்-202123:19:31 IST Report Abuse
S SRINIVASAN yaroda tax money yarrukku kodukka...you put tax on all and we have to pay our hard earned money and just like that you waive loans... idhu urupadathu
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X