பொது செய்தி

இந்தியா

அயோத்தியில் நிலம்: தேவஸ்தானம் கோரிக்கை

Updated : மார் 01, 2021 | Added : மார் 01, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
திருப்பதி: அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில் அருகே, ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கு, சிறிய இடம் ஒதுக்குமாறு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளது.உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், ராமர் கோவில் கட்டும் பணி வேகமாக நடக்கிறது. கட்டுமானப் பணியை, ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. இதற்காக, நாடு முழுதும்,

திருப்பதி: அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில் அருகே, ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கு, சிறிய இடம் ஒதுக்குமாறு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளது.



latest tamil news


உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், ராமர் கோவில் கட்டும் பணி வேகமாக நடக்கிறது. கட்டுமானப் பணியை, ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. இதற்காக, நாடு முழுதும், மக்களிடம் நிதி திரட்டும் பணி நடந்து வருகிறது.கடிதம்இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் அருகே, ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் விருப்பம் தெரிவித்துள்ளது.


latest tamil news


இது குறித்து, திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை தலைவர், ஒய்.வி.சுப்பா ரெட்டி கூறியதாவது:அயோத்தியில் ராமர் கோவில் அருகே, வெங்கடேச பெருமாள் கோவில் கட்டுவதற்காக, ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையிடம் நிலம் ஒதுக்கும்படி கோரிக்கை வைத்து, கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டுள்ளது.

தீர்மானம்
ராமர் கோவில் அருகே, பிரார்த்தனை மண்டபம் கட்டவும் விருப்பம் தெரிவிக்க உள்ளோம். இது தொடர்பாக, திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை குழு கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும், பசுவை தேசிய விலங்காக அறிவிக்கும்படி, மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கவும், கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thirumal Kumaresan - singapore,சிங்கப்பூர்
01-மார்-202118:54:19 IST Report Abuse
Thirumal Kumaresan திருப்பதி தேவஸ்தானம் தேவை இல்லாத வேலைகளை செய்யக்கூடாது,நான் வெங்கடாசலபதியின் பக்தன் தான்,நாங்கள் ஸ்ரீ ராமனையும் ஸ்ரீ வெங்கடாசலபதியையும் ஒன்றாகவே பார்க்கிறோம்.தேவை இல்லாத செயல் இது,அதற்க்கு ராமர்கோவில் காட்டும் அமைப்பு செவி சாய்க்க கூடாது.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
01-மார்-202114:12:07 IST Report Abuse
r.sundaram மிக அதிக அளவில் ராமர் கோவில் அயோத்தியில் கட்டுவதற்கு பணம் வசூல் ஆனதாக தகவல் வருகிறது. அந்த அதிக பணத்தை வைத்து, திருமலை திருப்பதி தேவஸ்தானம், திருமலையில் செய்வதுபோல இலவச தங்கும் விடுதிகள், மூன்று வேளை இலவச உணவு, குடிநீர் என்று வரும் பக்தர்களுக்கு உதவிகரமாக செலவிடலாம்.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
01-மார்-202112:39:55 IST Report Abuse
S.Baliah Seer ஏழுமலையான் என்ற பெருமாள்/என்ற மஹாவிஷ்ணு எந்த ஊரிலையா மலையில் இருக்கிறார்? குன்றத்துக் குமரன், குன்றுதோறும் குமரன் என்பான் அவருடைய மருமகன் முருகன் ஐயா.மருமனுக்கு நாமத்தைப்போட்டு ,அவனை மாமனார் ஆக்கிவிட்டீர்களே.ராமன் ஒரு வேட்டுவ அரசனையா. அவனுக்கும், முருகனுக்கும் (விஷ்ணுவுக்கும்) என்னய்யா சம்பந்தம்?நடிகர் சத்தியராஜ் பாஷையில் சொல்லப்போனால் உங்களுக்கு விளக்கம் சொல்லியே என் பிராணன் போகுதையா?
Rate this:
தமிழன் - தமிழகம்,இந்தியா
01-மார்-202120:21:44 IST Report Abuse
தமிழன்" ராமன் ஒரு வேட்டுவ அரசனையா" சைவ பறவைகள் விலங்குகளை மட்டும்தான் வேட்டையோ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X