புதுடில்லி: மார்ச் 1ம் தேதியிலிருந்து (இன்று) 2-ம் கட்ட தடுப்பூசி திட்டத்தில் பொது மக்களுக்கு தடுப்பூசி வழங்க உள்ளனர். இதற்கு கோ-வின் (Co-WIN) மற்றும் ஆரோக்கிய சேது செயலி மூலம் காலை 9 மணி முதல் பதிவு செய்யலாம்.
இன்று (மார்ச் 1) தொடங்கும் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி திட்டத்தில் 27 கோடி மக்களுக்கு தடுப்பூசி வழங்க உள்ளனர். ஏராளமான தனியார் மருத்துவமனைகளும் இத்தடுப்பூசி திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு தடுப்பூசிக்கு அவர்கள் ரூ.250 வசூலிப்பார்கள் என மத்திய அரசு அதிகாரிகள் கூறினர்.
மூத்த குடிமக்கள், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் இருக்கும் 45+ வயதினர் தடுப்பூசிக்காக பதிவு செய்யலாம். செயலி மூலம் சுயமாகவும், அரசு மருத்துவமனைகள், பொதுச் சேவை மையங்களிலும் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சுயமாக பதிவு செய்வதற்காக மத்திய அரசின் கோ-வின், ஆரோக்கிய சேது செயலிகளில் மாற்றம் செய்துள்ளனர். குடும்பத்தில் அதிகபட்சம் 4 உறுப்பினர்கள் வரை பதிவு செய்யலாம். இதற்கான வசதி காலை 9 மணி முதல் ஆரம்பமாகும். பதிவு செய்தவுடன் உறுதிப்படுத்திக்கொள்வதற்காக ஓ.டி.பி., அனுப்புவார்கள்.
நிறைய போலி செயலிகள், இணையதளங்களும் சுற்றுகின்றன. அது பற்றி சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. சமூக ஊடகங்களில் அதிகாரப்பூர்வ பக்கங்களை மட்டுமே பின்தொடரும் படி கேட்டுக்கொண்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE