அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமித்ஷாவுடன் பழனிசாமி - பன்னீர் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு

Updated : மார் 01, 2021 | Added : மார் 01, 2021 | கருத்துகள் (58)
Share
Advertisement
சென்னை : மத்திய அமைச்சர் அமித் ஷாவை, முதல்வர் இ.பி.எஸ்., - துணை முதல்வர் ஓ.பி.எஸ்., நேற்றிரவு(பிப்.,28) சந்தித்து, தொகுதி பங்கீடு குறித்துபேசினர்.தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர்களான, மத்திய அமைச்சர்கள் கிஷன்ரெட்டி, வி.கே.சிங், தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநில தலைவர் முருகன் ஆகியோர், நேற்று முன்தினம் காலை, முதல்வர் இ.பி.எஸ்., - துணை முதல்வர் ஓ.பி.எஸ்., ஆகியோரை, அவர்களின்
OPS, EPS, Amit Shah, TN election, ADMK, BJP

சென்னை : மத்திய அமைச்சர் அமித் ஷாவை, முதல்வர் இ.பி.எஸ்., - துணை முதல்வர் ஓ.பி.எஸ்., நேற்றிரவு(பிப்.,28) சந்தித்து, தொகுதி பங்கீடு குறித்துபேசினர்.

தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர்களான, மத்திய அமைச்சர்கள் கிஷன்ரெட்டி, வி.கே.சிங், தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநில தலைவர் முருகன் ஆகியோர், நேற்று முன்தினம் காலை, முதல்வர் இ.பி.எஸ்., - துணை முதல்வர் ஓ.பி.எஸ்., ஆகியோரை, அவர்களின் வீடுகளுக்கு சென்று சந்தித்தனர்.அப்போது, பா.ஜ., போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை அளித்தனர்.

மேலும்,பா.ஜ., தரப்பில், 40 தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி லோக்சபா தொகுதியை கேட்டதாகவும், தகவல் வெளியானது. இந்நிலையில், காரைக்கால் மற்றும் விழுப்புரத்தில் நேற்று நடந்த,தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசிய, மத்திய உள்துறை அமைச்சர், நேற்றிரவு சாலை மார்க்கமாக, காரில் சென்னை வந்தார்.


latest tamil news


கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கிய அவரை, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழக பா.ஜ., தலைவர் முருகன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்தனர். அதைத் தொடர்ந்து, இரவு, 10:00 மணிக்கு, முதல்வர் இ.பி.எஸ்., - துணை முதல்வர் ஓ.பி.எஸ்., ஆகியோர் ஓட்டலுக்குசென்று, அமித் ஷாவைசந்தித்தனர்.

பின்னர் இரு தரப்பின ரும், தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்தல் கள நிலவரம், அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ.,வுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேசிஉள்ளனர். பேச்சின் போது, தொகுதிகள் எண்ணிக்கையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், எந்தெந்த தொகுதிகள் என்பதில், சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அ.தி.மு.க., போட்டியிட விரும்பும் தொகுதிகளை, பா.ஜ., தரப்பில் அதிகம் கேட்டுள்ளனர். இது தொடர்பாக, இரு தரப்பிலும், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து, இன்று அல்லது நாளை தொகுதி பங்கீடுஅறிவிக்கப்படலாம்.

Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,பஹ்ரைன்
01-மார்-202119:49:48 IST Report Abuse
Raj நோட்டா தான்
Rate this:
Cancel
ராஜவேலு ஏழுமலை (ஜாதி மத அரசியலை எதிர்ப்போம்.) புரட்சி தலைவியால் அடையாளம் காட்டப்பட்ட ஒரே தலைவர் ஓபிஎஸ் மட்டுமே.
Rate this:
Cancel
ராஜவேலு ஏழுமலை (ஜாதி மத அரசியலை எதிர்ப்போம்.) நாம் தமிழருக்கு வேலை ஈசியாயிடும் போல....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X