புதுடில்லி: டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசிக்கான முதற்கட்ட தடுப்பூசியை இன்று காலை டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் போட்டுக் கொண்டார். தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மோடி நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்தியாவை கொரோனா இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என்று மேலும் கேட்டுக் கொண்டார். கொரோனா இல்லாத உலகை உருவாக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பணி மகத்தானது என்று மோடி புகழாரம் சூட்டினார். பிரதமர் மோடிக்கு புதுச்சேரியைச் சேர்ந்த செவிலியர் நிவேதா கொரோனா தடுப்பூசி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரானோ தடுப்பூசி பதிவு செய்ய
சுயமாக பதிவு செய்வதற்காக மத்திய அரசின் கோ-வின், ஆரோக்கிய சேது செயலிகளில் மாற்றம் செய்துள்ளனர்.
பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட இந்த முகவரி இணையதளத்தில் சென்று பதிவு செய்ய வேண்டும். https://www.cowin.gov.in/home.
நாடு முழுவதும் 7900-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள முடியும். தேர்வு செய்யப்பட்ட தனியார் மருத்துவமனைகள் தவிர அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கோவிட் தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE