அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நீங்கள், அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும் என்றா நினைப்பீர்கள்...

Updated : மார் 01, 2021 | Added : மார் 01, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரம் இது. ஒன்றுபட்டு உழைத்து, ஸ்டாலினை தமிழக முதல்வராக, அரியணையில் அமர வைப்போம். இனிவரும் காலங்களிலும் தி.மு.க., ஆட்சி தான்!- தி.மு.க., முதன்மைச் செயலர் கே.என்.நேரு உங்கள் ஆசை நியாயமானது தான். தி.மு.க.,வில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நீங்கள், அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும் என்றா நினைப்பீர்கள்...' என, கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க.,
A.D.M.K,ADMK,D.M.K,DMK,அ.தி.மு.க,

அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரம் இது. ஒன்றுபட்டு உழைத்து, ஸ்டாலினை தமிழக முதல்வராக, அரியணையில் அமர வைப்போம். இனிவரும் காலங்களிலும் தி.மு.க., ஆட்சி தான்!
- தி.மு.க., முதன்மைச் செயலர் கே.என்.நேரு


உங்கள் ஆசை நியாயமானது தான். தி.மு.க.,வில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நீங்கள், அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும் என்றா நினைப்பீர்கள்...' என, கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., முதன்மைச் செயலர் கே.என்.நேரு அறிக்கை



தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 4.5 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்நிலையில், அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை, 60 ஆக உயர்த்தி முதல்வர் அறிவித்து உள்ளார். இது, வேலைக்கு பதிவு செய்து காத்திருக்கும், 80 லட்சம் இளைஞர்களின் வயிற்றில் அடிக்கும் செயலாகும்.'சிலர் முயற்சித்தால், நாம் ஏன் மாற வேண்டும்.
- ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலர் மயில்


'தேர்தலுக்காக எதையும் இந்த அரசு செய்யும் என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் எதுவும் இல்லை...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலர் மயில் பேட்டி உள்ளது.


ஹிந்துக்களை மதம் மாற்றும் முயற்சியில் சில அமைப்புகள் ஈடுபடுகின்றன. இது தடுக்கப்பட வேண்டும். சட்டசபை தேர்தலில் ஹிந்து விரோதக் கட்சிகளை புறக்கணிக்க வேண்டும். ஹிந்து மதத்தை இழிவாக பேசுபவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும்.'
- ஹிந்து முன்னணி மாநில செயலர் முத்துக்குமார்


முஸ்லிம்களிலும், சீக்கியர்களிலும் யாரும் பெரும்பாலும் மதம் மாறுவதில்லையே...' என, சொல்லத் தோன்றும் வகையில், ஹிந்து முன்னணி மாநில செயலர் முத்துக்குமார் பேட்டி


தமிழகத்தில், 2019 லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணிக்கு கிடைத்த வெற்றி போல், சட்டசபை தேர்தலிலும் அமோக வெற்றி கிடைக்கும். அ.தி.மு.க., கடந்த, 10 ஆண்டுகால ஆட்சியில் எத்தனை நலத்திட்டங்களை ஏற்படுத்தி இருந்தாலும், மக்கள் மத்தியில் செல்லுபடியாகாது.'
- சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம்


எதன் அடிப்படையில் தி.மு.க., கூட்டணி வெல்லும்; அ.தி.மு.க., தோற்கும் என்பதை விளக்க வேண்டாமா...' என, கேட்கத் தோன்றும் வகையில், சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் பேட்டி



latest tamil news


தமிழகத்தில், 10 ஆண்டு கால, அ.தி.மு.க., ஆட்சியில் வேலைவாய்ப்பின்றி படித்த இளைஞர்கள் பாதிக்கப்பட்டனர். லஞ்சம் கேட்டதால், தமிழகத்துக்கு வராமல், மற்ற மாநிலங்களுக்கு பல தொழிற்சாலைகள் சென்று விட்டன. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், புதிய தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட்டு, படித்த இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பு வழங்கப்படும்.'
- தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி எம்.பி.,


முதலில், உங்கள் போராட்டங்களால் மூடப்பட்ட, ஸ்டெர்லைட் ஆலையை திறங்க; பத்தாயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி எம்.பி., பேச்சு



எதிர்க்கட்சி பேச ஆரம்பித்த தேர்தல் வாக்குறுதிகளை உடனுக்குடன் நிறைவேற்றியதன் மூலம், எதிர்க்கட்சியின் வியூகங்களை சுக்கு நுாறாக உடைத்துக் கொண்டே வந்திருக்கிறார், முதல்வர் இ.பி.எஸ்., இதனால், அ.தி.மு.க., முழு மெஜாரிட்டியுடன் ஜெயிக்கும்.
- நடிகர் எஸ்.வி.சேகர்


வாக்குறுதிகள் மட்டுமே, தேர்தல் வெற்றியை தீர்மானித்து விடுமா; பிற அம்சங்களும் உள்ளதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், நடிகர் எஸ்.வி.சேகர் அறிக்கை

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Marai Nayagan - Chennai,இந்தியா
01-மார்-202122:20:24 IST Report Abuse
Marai Nayagan திமுகவிருக்கு தெரிந்த ஒரே தொழில் நிலா அபகரிப்பு கொலை கொள்ளை. அடுத்தவன் வயிற்றில் அடித்து தன குடும்ப வயிறு வளர்த்தல். திருட்டு ரயில் கருணாநிதி அதைத்தான் சொல்லிக்கொடுத்துள்ளார்
Rate this:
Cancel
Marai Nayagan - Chennai,இந்தியா
01-மார்-202122:18:51 IST Report Abuse
Marai Nayagan காங்கிரஸ் போல மற்றும் உபி பிஹார் போல குடும்ப ஊழல் கட்சியான திமுக தமிழ்நாட்டில் விழத்தப்பட வேண்டும் என்பதே ஒற்றை குறிக்கோளாக கொடுள்ளனர் பாஜகவினர். சீக்கிரமே நடந்து விடும் என்றே தோன்றுகிறது. குடும்பத்தில் பிடியில் ஊழலின் பிடியில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விடிவு கிடைக்கும்
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
01-மார்-202117:10:09 IST Report Abuse
vbs manian தி மு காவுக்கும் தொழில் வளர்ச்சிக்கும் வெகு தூரம் என்று எல்லோருக்கும் இப்போது தெரிந்துவிட்டது.இவர்கள் வந்தால் அவர்கள் வரமாட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X