அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக.,வின் 10 ஆண்டு தொலைநோக்கு செயல்திட்டம்; மார்ச் 7ல் வெளியீடு

Updated : மார் 01, 2021 | Added : மார் 01, 2021 | கருத்துகள் (86)
Share
Advertisement
சென்னை: திமுக.,வின் 10 ஆண்டு தொலைநோக்கு செயல்திட்டம், திருச்சியில் மார்ச் 7ல் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வெளியிடப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக தலைவர் ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும்
திமுக, ஸ்டாலின், தொலைநோக்கு_செயல்திட்டம்

சென்னை: திமுக.,வின் 10 ஆண்டு தொலைநோக்கு செயல்திட்டம், திருச்சியில் மார்ச் 7ல் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வெளியிடப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:
பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி. மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ஆட்சி மாற்றம் 2 மாதங்களில் நடைபெறும். மார்ச் 7-ம் தேதி திருச்சியில் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. அதில், திமுக.,வின் 10 ஆண்டு தொலைநோக்கு செயல்திட்டம் வெளியிடப்படும்.


latest tamil news


எங்களது தொலைநோக்கை 2 கோடி குடும்பங்களுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அமித்ஷா போன்றோர்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நேற்று முதல் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார். பின்னர் அவர் மெரினாவில் உள்ள கருணாநிதி, அண்ணாதுரை நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.


ராகுல், கமல், ரஜினி வாழ்த்து


பிறந்த நாள் கொண்டாடும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காங்., முன்னாள் தலைவர் ராகுல், மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல், நடிகர் ரஜினி மற்றும் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-மார்-202106:41:07 IST Report Abuse
பேசும் தமிழன் அது தான் 100 நாட்களில் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து தருவேன் என்று இத்தனை நாளாய் சொன்னது எல்லாம் பொய்யா??? மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிய உங்களக்கு 10 ஆண்டுகள் தேவை... அப்போ 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது ஒன்றும் செய்ய வில்லை... அப்படி தானே???
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
02-மார்-202101:00:02 IST Report Abuse
Milirvan தொலைநோக்கு'ன்னா தூரத்துலருக்குற சப்பான் நாட்டு முதலமைச்சர் பதவிதான தலீவா?
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
02-மார்-202100:55:19 IST Report Abuse
Milirvan வீரரு, சூரரு.. பாம்பு புத்துக்குள்ள கைய்ய வுடுறாப்புல பொசுக்'குண்ணு கஜானா'ல கய்'ய வுடுற திட்டம்தானுங்களேண்ணா..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X