சென்னை: மானியமில்லா காஸ் சிலிண்டர் விலை கடந்த 30 நாளில் 4வது முறையாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 100 ரூபாய் உயர்ந்த நிலையில், தற்போது மேலும் ரூ.25 அதிகரித்துள்ளது.
தற்போது, ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில், ஆண்டிற்கு 12 காஸ் சிலிண்டர்கள் (14.2 கிலோ எடை கொண்டவை) விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மேல் கூடுதலான சிலிண்டர்கள் தேவைப்பட்டால், சந்தை விலை கொடுத்துதான் வாங்க வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், சமையல் காஸ் சிலிண்டர் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.

இந்நிலையில், தற்போதைய மானியமில்லா காஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.25 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 3 முறையாக 100 ரூபாய் அளவிற்கு காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. தற்போது சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலையேற்றம் இன்று (மார்ச் 1) முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு காஸ் சிலிண்டர் விலை 835 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த 30 நாளில் மட்டும் ரூ.125 உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE