அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாணவிகளுடன் நடனமாடிய ராகுல்

Updated : மார் 01, 2021 | Added : மார் 01, 2021 | கருத்துகள் (104)
Share
Advertisement
கன்னியாகுமரி: தமிழர்களின் மொழி, கலாசாரம், பண்பாட்டை காப்பாற்ற நான் இருக்கிறேன் என காங்., எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார். பிரசாரத்திற்கு இடையே மாணவிகளுடன் கலந்துரையாடிய ராகுல் உற்சாகத்தில் மாணவ, மாணவிகளுடன் நடனமாடினார். தமிழகத்திற்கு தேர்தல் சுற்றுப்பயணமாக வந்துள்ள காங்., எம்.பி ராகுல், கன்னியாகுமரி சர்ச் ரோடு பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர்
Rahul, Protect, TamilCulture, Congress, ராகுல், தமிழ் கலாசாரம், காங்கிரஸ்

கன்னியாகுமரி: தமிழர்களின் மொழி, கலாசாரம், பண்பாட்டை காப்பாற்ற நான் இருக்கிறேன் என காங்., எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார். பிரசாரத்திற்கு இடையே மாணவிகளுடன் கலந்துரையாடிய ராகுல் உற்சாகத்தில் மாணவ, மாணவிகளுடன் நடனமாடினார்.

தமிழகத்திற்கு தேர்தல் சுற்றுப்பயணமாக வந்துள்ள காங்., எம்.பி ராகுல், கன்னியாகுமரி சர்ச் ரோடு பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: மத்திய அரசு தமிழ் கலாசாரத்தை மதிக்கவில்லை. அவர்கள் சொல்வதை எல்லாம் செய்யும் ஒரு முதல்வர் இருக்கிறார். தமிழக முதல்வர் பழனிசாமி, மாநிலத்தை முன்னிலைப்படுத்தாமல், மோடி என்ன செய்ய விரும்புகிறார் என்பதையே முன்னிலைப்படுத்துகிறார். மோடிக்கு முன் தலைகுனிந்த ஒருவர் மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது.


latest tamil news



ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே வரலாறு என மோடி பேசுகிறார். அப்படியெனில் தமிழ் மொழி, இந்திய மொழி இல்லையா? தமிழ் கலாசாரம், இந்திய கலாசாரங்களில் ஒன்று இல்லையா? இது இந்த தேர்தலில் எதிரொலிக்க வேண்டும். தமிழர்களின் மொழி, கலாசாரம், பண்பாட்டை காப்பாற்ற நான் இருக்கிறேன். நமது நாட்டின் அனைத்து கலாசாரத்தையும் காப்பாற்றுவேன். இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news


தொடர்ந்து தக்கலையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து ராகுல் பேசியதாவது: காமராஜர் முதல்வராக இருந்தபோது, அவர் இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருந்தார். உதாரணமாக, அவர் செயல்படுத்திய மதிய உணவு திட்டத்தை, தற்போது இந்தியாவின் அனைத்து மாநில பள்ளிகளிலும் தொடர்ந்து வருகின்றனர். மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அதற்கேற்றார்போல செயல்படும் முதல்வர் இருந்தால் மட்டுமே முன்மாதிரியாக இருக்க முடியும். மோடியின் பேச்சுகளை கேட்டு செயல்பட்டால் அவ்வாறு இருக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (104)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
02-மார்-202114:31:23 IST Report Abuse
sankaseshan கொள்ளுத்தாத்தா போலவே பெண்களுடன் பழகவும் டான்ஸ் ஆடவும் பப்புவுக்கு ரொம்ப பிடிக்கும் PM ஆரத்துக்கு வேண்டிய தகுதி .
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
02-மார்-202105:56:31 IST Report Abuse
meenakshisundaram இந்த தமிழ் கலாச்சாரத்தை கட்டிக்காக்க வந்தவன் தான் திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோவிலுக்கு செருப்புடன் தரிசனம் சென்று தமிழ் மக்களை மதித்துள்ளான் .முடிந்தால் ஸ்டாலினுடன் சேர்ந்து ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யட்டுமே
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
02-மார்-202104:28:45 IST Report Abuse
NicoleThomson செக்யூலரிஸம் என்ற வார்த்தை பொய்க்கப்பட்டு விட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X