புதிய கட்சி துவங்க விருப்பமில்லை: டிரம்ப்

Updated : மார் 01, 2021 | Added : மார் 01, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், புதிய கட்சி துவங்குவதில் விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சியின் சார்பில் டொனால்ட் டிரம்ப் 2-வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட்டார். ஆனால், அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் ஜோ பைடனிடம் தோல்வியை தழுவினார். பைடனின் வெற்றியை
Trump, NewPoliticalParty, CPAC, RulesOut, Conservatives, டிரம்ப், புதிய கட்சி, விருப்பமில்லை, அதிபர் தேர்தல், போட்டி

வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், புதிய கட்சி துவங்குவதில் விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சியின் சார்பில் டொனால்ட் டிரம்ப் 2-வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட்டார். ஆனால், அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் ஜோ பைடனிடம் தோல்வியை தழுவினார். பைடனின் வெற்றியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார். பின்னர், தோல்வியை ஒப்புக்கொண்டு, வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார். கடந்த ஜன.,20ல் ஜோ பைடன் அதிபராக பொறுப்பேற்றார். அப்போது இருந்து டிரம்ப் புதிய கட்சியை துவங்க உள்ளதாக தகவல் வெளியானது.


latest tamil news



இந்நிலையில், தோல்விக்குப் பிறகு முதல் முறையாக பொது மேடையில் டிரம்ப் பேசியதாவது: 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் நான் போட்டியிடலாம். நாம் தொடங்கிய இந்த சிறப்பான பயணம் முடிவுக்கு வர வெகுதொலைவு உள்ளது. புதிய கட்சியை துவங்குவதில் விருப்பம் இல்லை. பைடன் நிர்வாகம் மோசமாக இருக்கப்போகிறது என்பது நமக்கு தெரியும். ஆனால், எந்தளவு மோசமாக இருக்கப்போகிறது என்பதை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி படுதோல்வியை சந்திக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-மார்-202119:37:53 IST Report Abuse
kulandhai Kannan Americans will feel sorry for defeating Trump.
Rate this:
Cancel
Vinoth - Hyderabad,இந்தியா
01-மார்-202118:58:08 IST Report Abuse
Vinoth நம்ம ஊருக்கு வந்து கட்சி ஆரம்பிங்க தலைவரே. தமிழன் இல்லை என்பது முதல் தகுதி. ஒன்னரை சதவீதம் ஒட்டு கிடைக்கும். பேரம் பேசி எதாவது கூட்டணியில் சேர்ந்திடுங்க. நிறைய பெட்டி கிடைக்கும். ஹிந்து மதத்தை மட்டம்தட்டி பேச தெரிந்தால் பெரிய பெரிய டிவி விவாதங்களில் சேர்த்துப்பாங்க.
Rate this:
Cancel
ocean - Kadappa,இந்தியா
01-மார்-202118:23:49 IST Report Abuse
ocean ட்ரம்ப் சற்று மெலிந்துள்ளார். பேசும்போது வாயை மானாவாரியாக திறக்காமல் அளவோடு இன்முகத்துடன் பேசுவது தலைமைக்கு அழகு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X