சென்னை : தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸின் ராகுல் ஆகியோர் தமிழ் மீது தாங்கள் கொண்ட ஆர்வத்தை வெளிப்படுத்திய விஷயம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.
தமிழகத்தில் ஏப்., 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேசிய தலைவர்களின் பார்வை இங்கு விழ தொடங்கி உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக தமிழகத்தில் அரசு முறை பயணம் மற்றும் பிரசாரத்தில் பங்கேற்றார் பிரதமர் மோடி. அப்போது தமிழ் மீது அவர் கொண்ட ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார். மேலும் நேற்று நாட்டு மக்களுக்காக மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசும் போது கூட, ''உலகின் மிகப் பழமையான மற்றும் பிரபலமான மொழியான தமிழை கற்காமல் தவறவிட்டு விட்டோமே என்ற வருத்தம் எனக்கு உண்டு. தமிழ் இலக்கியத்தின் மேன்மை மற்றும் கவிதை வரிகளில் உள்ள ஆழம் குறித்து, பலரும் என்னிடம் சிலாகித்து கூறியுள்ளனர்'' என்றார்.
![]()
|
இதேப்போன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தமிழகத்தில் கூட்டணி மற்றும் பிரசார கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். அவரும் தமிழ் மீது கொண்ட ஆர்வத்தை நேற்று நடந்த விழுப்புரம் கூட்டத்தில் வெளிப்படுத்தினார். ''உலகின் உன்னதமான மொழியான தமிழ் மொழியில் என்னால் பேச இயலவில்லை என்பது வருத்தமாக உள்ளது'' என தெரிவித்தார்.
![]() Advertisement
|
இவர்களை போன்று காங்கிரஸின் முன்னாள் தலைவரும், எம்.பி.யு.,மான ராகுல் தமிழகத்தில் மூன்று நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். இவர் தமிழகம் வருவதற்கு முன்பாக தான் திருக்குறளை படித்து வருவதாகவும், அதில் சொல்லப்பட்ட விஷயங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தியது என கூறியிருந்தார். மேலும் அவர் தமிழகத்தில் சுற்றுப்பயணம் சென்ற இடங்களில் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தமிழிலும் பேசி அசத்தினார். அதோடு சாமானிய மக்களிடமும் சென்று கலந்துரையாடி வருகிறார்.
![]()
|
இப்படி தேசிய தலைவர்கள் எல்லாம் தமிழ் மீது காட்டும் ஆர்வம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. இவர்கள் இப்படி பேசியிருப்பது அரசியலுக்காக தான். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்., 6ல் வருகிறது. அதில் தாங்களும், தங்களது கூட்டணி கட்சியினரும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இவர்கள் இப்படி தமிழ், தமிழ் என்று பேசுகிறார்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் இது அரசியல் லாபத்திற்காக தான் என்றாலும் கூட இப்போதாவது இவர்களுக்கு தமிழ் மொழியின் மீதான அருமை, பெருமைகள் புரிந்ததே அதுவே தமிழுக்கு கிடைத்த சிறப்பு தான் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனால் டுவிட்டரில் #Tamil என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனது.
![]()
|
இந்த ஹேஷ்டாக்கில் பலரும் தெரிவிக்கும் கருத்துக்களோடு அமித்ஷா, ராகுல் பேசிய விஷயங்களையும் டிரெண்ட் செய்கின்றனர். குறிப்பாக ராகுல் சாமானிய மக்களுடன் கலந்துரையாடியது, சாலையோர கடையில் டீ சாப்பிட்டு அந்த டீ நன்றாக இருப்பதாக தமிழில் கூறியது, நுங்கு உண்பது, இளநீர் குடிப்பது உள்ளிட்ட வீடியோக்களும் வைரலாகின. அதேப்போன்று அமித்ஷா சாலையோர உணவு கடையில் உணவு சாப்பிட்ட போட்டோக்களும் வைரலாகின.
![]()
|