பொது செய்தி

இந்தியா

கொரோனா தடுப்பூசிகள் போடப்படும் தனியார் மருத்துவமனைகள் பட்டியல் வெளியீடு

Updated : மார் 01, 2021 | Added : மார் 01, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: இன்று (மார்ச் 1) முதல் 2ம் கட்ட தடுப்பூசி திட்டத்தில் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதில், தடுப்பூசி போடப்படும் தனியார் மருத்துவமனைகளின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.நாடு முழுவதும் முதல் கட்டமாக ஜன.,16 முதல் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில், இன்று முதல் 2-ம் கட்ட தடுப்பூசி திட்டத்தில் 60 வயதை கடந்த
CovidVaccine, PrivateHospital, List, கொரோனா, தடுப்பூசி, தனியார் மருத்துவமனை, பட்டியல், வெளியீடு

புதுடில்லி: இன்று (மார்ச் 1) முதல் 2ம் கட்ட தடுப்பூசி திட்டத்தில் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதில், தடுப்பூசி போடப்படும் தனியார் மருத்துவமனைகளின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் முதல் கட்டமாக ஜன.,16 முதல் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில், இன்று முதல் 2-ம் கட்ட தடுப்பூசி திட்டத்தில் 60 வயதை கடந்த பொது மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் 27 கோடி மக்கள் தடுப்பூசி செலுத்தவுள்ளனர். இதற்கு கோ-வின் (Co-WIN) https://www.cowin.gov.in
மற்றும் ஆரோக்கிய சேது செயலி மூலம் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



இந்த தடுப்பூசிகளை செலுத்துவதற்கு தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் ஒரு தடுப்பூசிக்கு ரூ.250-ம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மூத்த குடிமக்கள், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் இருக்கும் 45 வயதுக்கு மேற்பட்டோர்கள் தடுப்பூசிக்காக பதிவு செய்யலாம். செயலி மூலம் சுயமாகவும், அரசு மருத்துவமனைகள், பொதுச் சேவை மையங்களிலும் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


latest tamil news



சுயமாக பதிவு செய்வதற்காக மத்திய அரசின் கோ-வின், ஆரோக்கிய சேது செயலிகளில் மாற்றம் செய்துள்ளனர். குடும்பத்தில் அதிகபட்சம் 4 உறுப்பினர்கள் வரை பதிவு செய்யலாம். பதிவு செய்தவுடன் உறுதிப்படுத்திக்கொள்வதற்காக ஓ.டி.பி., அனுப்புவார்கள். நிறைய போலி செயலிகள், இணையதளங்களும் சுற்றுகின்றன. அது பற்றி சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. சமூக ஊடகங்களில் அதிகாரப்பூர்வ பக்கங்களை மட்டுமே பின்தொடரும் படி கேட்டுக்கொண்டுள்ளது.


latest tamil news



இந்நிலையில், தடுப்பூசி செலுத்தும் தனியார் மருத்துவமனைகளின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில், தனியார் மருத்துவமனைகளின் முகவரி, மருத்துவர்கள், அவர்களின் தொடர்பு எண்கள் உள்ளிட்ட விவரங்களும் இணைக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்த விரும்புபவர்கள் https://www.mohfw.gov.in/pdf/PMJAYPRIVATEHOSPITALSCONSOLIDATED என்ற முகவரியில் சென்று பட்டியலை டவுண்லோடு செய்யலாம். அதில், தங்கள் மாநிலத்தில் உள்ள மாவட்ட வாரியான மருத்துவமனைகளில் ஏதேனும் ஒன்றில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
02-மார்-202106:42:05 IST Report Abuse
Darmavan இதன் விலையை 250 என்று முடிவு செய்தது ஒரு கொள்ளைக்கு துணை போகும் செயல். கேவலம்
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
01-மார்-202122:10:37 IST Report Abuse
R. Vidya Sagar இன்று அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் ஊசி போடுவதற்கு பதிவு செய்தேன். ஆஸ்பத்திரியை தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது, உங்களுக்கு போன் வரும், காத்திருங்கள் என்றார்கள். முடிவு வரை போன் வர வில்லை.
Rate this:
Cancel
01-மார்-202116:17:00 IST Report Abuse
ஆரூர் ரங் இயன்றவர்கள் கூடியவரை வசதியற்ற ஏழைகளுக்கு இடைஞ்சல் இல்லாமலிருக்க தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு🙏 கேட்டுக கொள்கிறேன்🙏. தடுப்பூசி விலைக்கு மேல் 100 ரூபாய்தான். அது சாதாரண டாக்டர் ஃபீஸைவிட மிகக் குறைவே. இதனால் தனியாருக்கு லாபமில்லை. ஆனால் ஏழைகளுக்கு நல்லது
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
02-மார்-202106:43:14 IST Report Abuse
Darmavanஒரு ஊசி போட 100 ரூபாய் என்பது அதிகம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X