தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி: ஹர்ஷ்வர்தன் புகழாரம்

Updated : மார் 01, 2021 | Added : மார் 01, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
புதுடில்லி: எப்போதுமே முன்மாதிரியாக வழிநடத்த வேண்டும் எனக் கூறும் பிரதமர் மோடி, முதல் நபராக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் புகழ்ந்துள்ளார்.இந்தியாவில் இன்று (மார்ச் 1) முதல் 2ம் கட்ட தடுப்பூசி திட்டத்தில் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது: நமது
CovidVaccine, PMModi, Harshvardhan, கொரோனா, தடுப்பூசி, பிரதமர், மோடி, ஹர்ஷ்வர்தன்

புதுடில்லி: எப்போதுமே முன்மாதிரியாக வழிநடத்த வேண்டும் எனக் கூறும் பிரதமர் மோடி, முதல் நபராக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் புகழ்ந்துள்ளார்.

இந்தியாவில் இன்று (மார்ச் 1) முதல் 2ம் கட்ட தடுப்பூசி திட்டத்தில் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது: நமது நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை என்று நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக்கொண்டிருக்கிறேன். நாங்கள் பிரதமருக்கு நன்றி கூறுகிறோம். நீங்கள் எப்போதுமே முன்மாதிரியாக வழிநடத்த வேண்டும் என்று அவர் எங்களிடம் கூறினார். அதேபோல், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்கியதும், முதல் நபராக போட்டுக்கொண்டார்.


latest tamil news


பிரதமர் கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக் கொண்டார். அதற்கு எதிராக நிறைய தவறான தகவல்கள் பரவின. ஆனால், பிரதமர் நாட்டிற்கு ஒரு தெளிவான செய்தியை அளித்துள்ளார் என்று நினைக்கிறேன். அனைத்து தவறான தகவல்களும் தயக்கங்களும் புதைக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக நான் இன்று (மார்ச் 1) முன்பதிவு செய்து, நாளை தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளேன். 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து குடிமக்கள், அனைத்து எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களும் தடுப்பூசி போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


latest tamil news


தடுப்பூசியால் பக்க விளைவுகள், வீக்கம் அல்லது காய்ச்சல் போன்றவை மிகக் குறைவாகவே உள்ளது. சாதாரண தடுப்பூசி செலுத்தும்போது கூட சில நேரங்களில் இதுபோன்று நிகழ்கிறது. தடுப்பூசி காரணமாக பக்கவிளைவுகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் விகிதம் 0.0004 (அதாவது 10 ஆயிரத்திற்கு 4 பேர் என்ற விகிதம்)-க்கும் குறைவாகவே உள்ளது. அதே நேரத்தில், தடுப்பூசி காரணமாக இதுவரை உயிரிழப்புகள் இல்லை.

தடுப்பூசி போட்ட 4 நாட்கள் அல்லது 10 நாட்களுக்குப் பிறகு ஒருவர் இறந்துவிட்டால், அது தடுப்பூசியால் இறந்ததாக கருத முடியாது. அவ்வாறு இறந்தவர்களது காரணம் குறித்து அறிவியல் பூர்வமாக ஆராயப்பட்டுள்ளது. உயர் ஆற்றல்மிக்க நிபுணர் குழு அதை மதிப்பீடு செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
02-மார்-202111:25:28 IST Report Abuse
vbs manian மோடியின் அதிகார துஷ் பிரயோகம் இல்லாத நிர்வாகத்துக்கு சில சான்றுகள். சகோதரர்கள் மற்றும் நெருங்கிய உறவினர் அவர்கள் செய்யும் வேலைகள் அம்ரித் பாய் , - பிரைவேட் பேக்டரி வேலை. ப்ரஹலாத் - ரேஷன் ஷாப் அரவிந்த் - சில்லறை இரும்பு சாமான் வியாபாரி. போகிலால் -. அசோக் குரோசேரி ஸ்டார். சந்திர காண்ட் - கோசாலை ஊழியர். பேட்டி கடை பாரத் - பெட்ரோல் பேங்க் அட்டெண்டர் இவர்கள் யாருக்கும் தனது அரசியல் நிர்வாக வாழ்க்கையில் மோடி எந்த உதவியும் செய்யவில்லை. வேறு எந்த கட்சியிலாவது நினைத்து பார்க்க முடியுமா.
Rate this:
Cancel
கொடுக்கு - Ang Mo Kio ,சிங்கப்பூர்
02-மார்-202105:46:40 IST Report Abuse
கொடுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டாரா ஓகே
Rate this:
Cancel
01-மார்-202123:15:18 IST Report Abuse
ஆப்பு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட முதல் இந்திய பிரதமர்.நேரு முதல் வாஜ்பாய் , மன்மோகன் வரை யாரும் செய்யாத சாதனை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X