பலாத்கார வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி கேள்வி

Updated : மார் 03, 2021 | Added : மார் 01, 2021 | கருத்துகள் (35)
Share
Advertisement
புதுடில்லி: 'பாலியல் பலாத்காரம் செய்த பெண்ணை திருமணம் செய்வீர்களா' என, பலாத்காரம் செய்தவரிடம், உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மஹாராஷ்டிரா மின் வாரியத்தில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் மோஹித் சுபாஷ் சவான் என்பவர், பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கீழ்
பலாத்கார வழக்கு, சுப்ரீம் கோர்ட், கேள்வி

புதுடில்லி: 'பாலியல் பலாத்காரம் செய்த பெண்ணை திருமணம் செய்வீர்களா' என, பலாத்காரம் செய்தவரிடம், உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா மின் வாரியத்தில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் மோஹித் சுபாஷ் சவான் என்பவர், பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கீழ் நீதிமன்றம் அளித்த ஜாமினை, மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


உடன்பாடு


பள்ளி மாணவியான, 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக, அவர் மீது, 'போக்சோ' எனப்படும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. அந்த சிறுமிக்கு, 18 வயதாகும்போது, திருமணம் செய்து கொள்வதாக, இரு குடும்பத்தார் இடையே உடன்பாடு ஏற்பட்டது. ஆனால், 18 வயதானபோது, அந்த பெண்ணை திருமணம் செய்ய, அவர் மறுத்துள்ளார்.


உத்தரவு


தற்போது சவான் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 'இந்த வழக்கில் கைது செய்யப்பட்டால், அரசு வேலையை இழக்க நேரிடும்' என, அவரது சார்பில் வாதிடப்பட்டது.

அப்போது, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, எஸ்.ஏ. பாப்டே கூறியதாவது: சிறுமியாக இருந்தபோது, ஆசை வார்த்தை காட்டி பலாத்காரம் செய்துள்ளீர்கள். அப்போது அரசு வேலையில் இருப்பது உங்களுக்கு தெரியவில்லையா. அந்த பெண்ணை திருமணம் செய்வதாக இருந்தால், உங்களுக்கு உதவ முடியும். இல்லாவிட்டால், கைது செய்யப்படுவீர்; அரசு வேலையை இழக்க நேரிடும்.இவ்வாறு, அவர் கூறினார்.

தனக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளதால், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய முடியாது என, சவான் சார்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, 'சவானை கைது செய்வதற்கு, தற்காலிகமாக, நான்கு வாரங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. ஜாமின் கேட்டு முறையாக விண்ணப்பிக்கவும்' என, உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - chennai,சவுதி அரேபியா
08-மார்-202118:49:46 IST Report Abuse
Hari நாட்டாமை தீர்ப்புதான் சரி
Rate this:
Cancel
Siva - Chennai,கனடா
04-மார்-202122:53:45 IST Report Abuse
Siva India's Justice tem is useless. Doesn't know how to differentiate law biding Citizens and violent criminals / repeat offenders / antinational. Need to separate people. We need to overhaul the tem into two. Retaining facility and rehabilitating facility. Law biding Citizens alone deserve rehabilitating facility (our current jail). Others need harsh treatment and they don't deserve tax payers money. Let them work while serving their sentence.
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
02-மார்-202119:39:20 IST Report Abuse
spr முதலில் சிறுமியை கெடுத்தற்காக ஒரு தண்டனையும் அது தெரிந்து ஒரு உடன்படிக்கை வந்த பின்னும் இன்னொரு பெண்ணை (ஏமாற்றி) கல்யாணம் செய்து கொண்டதற்காக மற்றுமொரு தண்டனையும் இப்பொழுது மறுப்பதற்காக மேலுமொரு தண்டனையையும் கொடுத்து அவனை உண்மையிலேயே ஆயுட் கைதியாக தண்டிக்கலாம் இதனால் ஜெயிலில் கும்பல் அதிகரிக்கலாம் enbathaal, அரசுக்கு செலவு வைக்காமல் அவனை தூக்கு போடலாம் இதற்கு உடந்தையாக இருந்தவர்களுக்கும் கடும் தண்டனை கொடுக்கலாம் நீதிபதிக்கு கடுமையான தண்டனை தாராவிடில் வழக்கு முழுமை பெறாது என்பதால் அவனைத் தூக்கில் போட்டதால் , அவன் அனுபவிக்காத தண்டனைக் காலத்தை நீதிபதி அனுபவிக்கச் சொல்லலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X