அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்கள் நீதி மய்யம் கட்சியில் நேர்காணல் துவக்கம்

Updated : மார் 03, 2021 | Added : மார் 01, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை : மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், தேர்தலில் போட்டியிடுவோருக்கான நேர்காணல், நேற்று துவங்கியது.நடிகர் கமலின், மக்கள் நீதி மய்யம் கட்சி, சட்டசபை தேர்தலில், முதல் முறையாக போட்டியிட உள்ளது. கட்சி துவக்கிய, ஓரே ஆண்டில், லோக்சபா தேர்தலை சந்தித்த கமல், ௩ சதவீதத்திற்கும் மேலான ஓட்டுகளை பெற்றார். இந்த தேர்தலில், முதல்வர் கனவோடு களத்தில் இறங்கியுள்ளார். நாளை முதல்,
கமல் கட்சி , நேர்காணல், மக்கள் நீதி மய்யம்,

சென்னை : மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், தேர்தலில் போட்டியிடுவோருக்கான நேர்காணல், நேற்று துவங்கியது.

நடிகர் கமலின், மக்கள் நீதி மய்யம் கட்சி, சட்டசபை தேர்தலில், முதல் முறையாக போட்டியிட உள்ளது. கட்சி துவக்கிய, ஓரே ஆண்டில், லோக்சபா தேர்தலை சந்தித்த கமல், ௩ சதவீதத்திற்கும் மேலான ஓட்டுகளை பெற்றார்.

இந்த தேர்தலில், முதல்வர் கனவோடு களத்தில் இறங்கியுள்ளார். நாளை முதல், அடுத்த கட்ட பிரசாரத்தை ஆரம்பிக்க உள்ளார். இந்நிலையில், வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல், கமல் தலைமையில், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில், நேற்று துவங்கியது.

தேர்தல் களம் காண, விருப்ப மனு அளித்த, நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களை அழைத்து, கமல் தலைமையிலான தேர்வு குழுவினர் பேசினர். இதில், துணை தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். நேர்காணலில், வேட்பாளரின் சொத்து விபரம், தனித் திறன், கல்வி உள்ளிட்ட விபரங்களுடன், தேர்தலில் நிற்பதற்கான காரணம், ஊழல் செய்தால் வெளியேற்றப்படுவோம் என்ற உறுதிமொழி உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

இதற்கிடையில், திருவண்ணாமலை மாவட்ட, ரஜினி மக்கள் மன்ற இளைஞர் அணி துணை செயலர் உதயகுமார் தலைமையில், 60 பேர், மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தனர்.

உதயகுமார் கூறுகையில், ''ரஜினி, கட்சி துவக்கி மாற்றத்தை தருவார் என, எதிர்பார்த்தோம். அவரால் முடியாததால், அவரது நண்பர் கமல் தருவார் என்ற நம்பிக்கையில் இணைந்தோம். எங்களது மாவட்டத்தில் இருந்த, 62 பேரில், 60 பேர், கமல் கட்சிக்கு வந்த விட்டோம்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kulla - chennai,இந்தியா
04-மார்-202111:39:35 IST Report Abuse
kulla மக்களுக்கு முன்னர் ஏதாவது உதவிகள் செய்துள்ளாரா ? சென்னையில் மழை ,புயல் வந்த பொழுது மக்களுக்கு உதவிகள் செய்தது உண்டா? நீங்கள் னால நடிகராக இருக்கலாம் ஆனால் ஏழைகளின் வாழ்க்கையில் ஒளிஏற்றி வைத்த தலைவர் புரட்சி தலைவரும், தலைவியும் தான். நீங்கள் எல்லாம் மக்களை ஏமாற்ற வந்த கூட்டம்.
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
02-மார்-202121:17:30 IST Report Abuse
jagan தீண்டாமை இங்கேயும். பழ கருப்பையாவுடன்(சேர் கொடுத்ததே உயர்வு) ஐயங்கார்வாள் உக்கார மாட்டார். கருப்பையாவும் எப்பிடியாவது ஒரு இன்னோவா தட்டணும்னு பார்க்கிறார் நடக்க மாட்டேங்குதே
Rate this:
Cancel
அடங்குல - Madurai,இந்தியா
02-மார்-202119:24:33 IST Report Abuse
அடங்குல கைய கட்டிக்கிட்டு வொக்காந்திருக்கணும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X