'ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி சேமிக்க 'பாஸ்டேக்' முறை உதவும்'

Updated : மார் 01, 2021 | Added : மார் 01, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி :“எரிபொருள் செலவில், ஆண்டுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை சேமிக்க, இந்த கட்டாய, 'பாஸ்டேக்' முறை உதவும்,” என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.சுங்கக் கட்டணம்சுங்கச்சாவடிகளில், வாகனங்களுக்கான சுங்கக் கட்டணத்தை மின்னணு முறையில் செலுத்தும், 'பாஸ்டேக்' வசதி, 2016ல், அறிமுகம் செய்யப்பட்டது. சமீபத்தில், அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் உள்ள
'ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி சேமிக்க 'பாஸ்டேக்' முறை உதவும்'

புதுடில்லி :“எரிபொருள் செலவில், ஆண்டுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை சேமிக்க, இந்த கட்டாய, 'பாஸ்டேக்' முறை உதவும்,” என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.


சுங்கக் கட்டணம்சுங்கச்சாவடிகளில், வாகனங்களுக்கான சுங்கக் கட்டணத்தை மின்னணு முறையில் செலுத்தும், 'பாஸ்டேக்' வசதி, 2016ல், அறிமுகம் செய்யப்பட்டது. சமீபத்தில், அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் உள்ள சுங்கச்சாவடிகளில், இந்த பாஸ்டேக் முறை, கட்டாயமாக்கப்பட்டது.இந்நிலையில், இந்த கட்டாய பாஸ்டேக் முறையால், பலகோடி ரூபாய் சேமிப்பு ஏற்படும் என, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான நிதின் கட்கரி, தெரிவித்துள்ளார்.


latest tamil news


நாடு முழுதும் உள்ள சுங்கச்சாவடிகளை நேரலையில் கண்காணிக்கும் தொழில்நுட்ப அமைப்பை, நிதின் கட்கரி, நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.அந்த நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில், பாஸ்டேக் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், அங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறை, தாமதம் ஆகாமல் எளிதில் முடிகிறது.
93 சதவீதம்நாட்டில் உள்ள, 80 சதவீத சுங்கச்சாவடிகளில், வாகனங்கள் காத்திருக்காமல், சுங்கக் கட்டணத்தை செலுத்திச் செல்கின்றன. இது, எரிபொருள் செலவில், ஆண்டுக்கு, 20ஆயிரம் கோடி ரூபாய் வரை சேமிக்க உதவும்.இந்த பாஸ்டேக் முறையால், சுங்கக் கட்டண வசூல், கடந்த, 15 நாட்களில், 80 சதவீதத்தில் இருந்து, 93 சதவீதமாக உயர்ந்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dan - Chennai,இந்தியா
02-மார்-202112:52:31 IST Report Abuse
Dan More than 2 hours , lakhs of people are suffering in the traffic due to the VIP ( Cheif Minister) movement . First you abolish this tem to save our time and to save huge amount of Fuel and also can save the nation from pollution due to that. It became a curse to this country . Often I saw even the Ambulances have to wait for 30 -40 mins to cross it.... Shameless Govt
Rate this:
Cancel
THANGARAJ - CHENNAI,இந்தியா
02-மார்-202112:18:58 IST Report Abuse
THANGARAJ பாஸ்ட் டேக் மூலமாக எரிபொருள் மிச்சம் ஒன்றும் இல்லை. அப்படி இருந்தால் அதன் பலனை டோல் (toll) வரி யை குறைக்கலாம்.....
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
02-மார்-202110:57:24 IST Report Abuse
Malick Raja முதலில் இவடரின் சொத்துக்கணக்கை வெளியிட்டு ..இவர் போன்றவர்களின் கணக்கிலவராத சொத்துக்களை அரசுடைமை ஆக்கினால் இரண்டு லட்சம் கோடி ..முதற்கட்டமாக வந்துவிடும் .. பிளாட்பாரத்தில் வசித்து வந்த இவரின் இன்றைய சொத்து மதிப்பு ரூ 25000 கோடிகளுக்கு இருப்பது முதற்கட்ட வரவு .. அடேங்கப்பா .. என்று வியக்காதீர்கள் ..இன்னும் பலவும் இருக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X