தேர்தல் களம் 2021

தமிழ்நாடு

அடித்து ஆடி அசத்திய முதல்வர் பழனிசாமி

Updated : மார் 03, 2021 | Added : மார் 01, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
மார்ச், 10ம் தேதி வாக்கில் தான், தேர்தல் தேதி அறிவிப்பு வரும் என, தமிழக கட்சிகள் எதிர்பார்த்தன. அ.தி.மு.க.,வும் தான். திடீரென பிப்., 26ம் தேதி அறிவிப்பு வந்துவிட்டது. அமைச்சர்களும், அதிகாரிகளும் திகைத்து போனார்கள். முதல் ஆளாக சுதாரித்து கொண்டவர், முதல்வர் இ.பி.எஸ்., தான். 'வந்தது வந்தாச்சு; இனிமே நடக்க வேண்டியதை பாப்போம்' என்று கிராமத்து வழக்கப்படி ஆறுதல் படுத்தியவர்,
முதல்வர் பழனிசாமி,  பாமக, பா.ம.க., வன்னியர் இட ஒதுக்கீடு,

மார்ச், 10ம் தேதி வாக்கில் தான், தேர்தல் தேதி அறிவிப்பு வரும் என, தமிழக கட்சிகள் எதிர்பார்த்தன. அ.தி.மு.க.,வும் தான். திடீரென பிப்., 26ம் தேதி அறிவிப்பு வந்துவிட்டது. அமைச்சர்களும், அதிகாரிகளும் திகைத்து போனார்கள்.

முதல் ஆளாக சுதாரித்து கொண்டவர், முதல்வர் இ.பி.எஸ்., தான். 'வந்தது வந்தாச்சு; இனிமே நடக்க வேண்டியதை பாப்போம்' என்று கிராமத்து வழக்கப்படி ஆறுதல் படுத்தியவர், பம்பரமாக சுழன்று அதை செயல்படுத்தினார். அடுத்த நாள் தொடங்குவதாக இருந்த பணிகளை, உடனே துவக்கினார், புதிய திட்டங்களுக்கு, வேகமாக அடிக்கல் நாட்டினார். வன்னியர்களுக்கு, 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா தாக்கல் செய்து, உடனே நிறைவேற்ற வைத்தார்.


திணறிய சந்தர்ப்பங்கள்

அடுத்த நாளே, பா.ம.க.,வை வரவழைத்து, உடன்பாட்டில் கையெழுத்திட வைத்தார். அமைச்சர்களை விஜயகாந்த் வீட்டுக்கு அனுப்பி, பேச வைத்தார்.அனைத்துக்கும் மேலாக, மசோதா நிறைவேறிய நாளிலேயே அதற்கு கவர்னரின் ஒப்புதலை பெற்று சட்டமாக்கி, அரசிதழிலும் வெளியிட செய்தார்.

கூட்டணி கட்சிகளை வழிக்கு கொண்டுவர, கருணாநிதியும், ஜெயலலிதாவுமே திணறிய சந்தர்ப்பங்கள் உண்டு. அனுபவம் போதாத இ.பி.எஸ்., எப்படி சமாளிக்க போகிறாரோ என, கட்சிக்காரர்களுக்கே கொஞ்சம் கவலை இருந்தது. ஸ்டாலினும் அப்படி தான் நினைத்தார்.

எனவே தான், முதல் கூட்டணி அறிவிப்பு அறிவாலயத்தில் வெளியாகும் என, சொல்லி வந்தார். அனைவரின் கணிப்பையும் பொய்யாக்கி, 'டுவென்டி20 மேச்' மாதிரி அடித்து ஆடிவிட்டார், விவசாயி.

குறிப்பாக, 40, 50 என, மிரள வைத்து கொண்டிருந்த, பா.ம.க.,வை, 23க்கு சம்மதிக்க வைத்தது, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. ஐ.ஏ.எஸ்., -- ஐ.பி.எஸ்., அதிகாரிகளே, வியப்புடன் இதை விவாதிக்கின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
03-மார்-202117:06:19 IST Report Abuse
S.P. Barucha வன்னியர்களுக்கு, 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா தாக்கல் செய்து, உடனே நிறைவேற்றம். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளே, வியப்புடன் இதை விவாதிக்கின்றனர்.
Rate this:
Cancel
rameshkumar natarajan - kochi,இந்தியா
03-மார்-202113:33:04 IST Report Abuse
rameshkumar natarajan Many development projects like SIPCOT, Software corridor , Car manufacturing companies, many Flyovers were brought by DMK regime only. Why many comments are in opposing nature for DMK. is it because it has brought social Liberalization in tamil nadu. This liberalization has brought many oppressed classes to live with dignity. That's the reason certain communities are opposing DMK
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
03-மார்-202112:58:15 IST Report Abuse
Matt P யார் வரவேணும் என்பதை வீட் யார் வரக்கூடாது என்பதில் மக்களில் தெளிவாக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X