பொது செய்தி

தமிழ்நாடு

'பணப் பட்டுவாடாவை தடுத்து நிறுத்துங்கள்'

Updated : மார் 02, 2021 | Added : மார் 02, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை : 'சட்டசபை தேர்தலில், பணப் பட்டுவாடாவை தடுத்து நிறுத்த வேண்டும்' என, அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.தேர்தல் கமிஷன் சார்பில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஆலோசனை கூட்டம், நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தலைமையில் நடந்தது. இதில், அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., - தே.மு.தி.க., மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள்
'பணப் பட்டுவாடாவை தடுத்து நிறுத்துங்கள்'

சென்னை : 'சட்டசபை தேர்தலில், பணப் பட்டுவாடாவை தடுத்து நிறுத்த வேண்டும்' என, அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

தேர்தல் கமிஷன் சார்பில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஆலோசனை கூட்டம், நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தலைமையில் நடந்தது. இதில், அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., - தே.மு.தி.க., மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசியது குறித்து, அவர்கள் அளித்த பேட்டி:


latest tamil news
* துணை சபாநாயகர் ஜெயராமன்: வீடுகளில் இருந்து ஓட்டளிப்போர், மீண்டும் ஓட்டுச்சாவடிக்கு வராமல் இருக்க, எடுக்கப்படும் நடவடிக்கை விபரத்தை தெரிவிக்க வேண்டும். வேட்பு மனுவில் மாற்றம் செய்யப்பட்டிருந்தால், அரசியல் கட்சிகள் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றோம்.

புதிய வாக்காளர்களுக்கு, உடனடியாக அடையாள அட்டை வழங்க, தனி சிறப்பு முகாம் நடத்த உள்ளதாக, தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். 'ஆன்லைன்' வழியாக பதிவிறக்கம் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது.
* தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி: ஆளும் கட்சியினர், பணப்பட்டுவாடாவை ஆரம்பித்து விட்டனர். கடந்த சட்டசபை தேர்தல் நேரத்தில், 570 கோடி ரூபாய், 'கன்டெய்னர்' லாரியில் பிடிபட்டது. அந்த பணம் யாருடையது; எங்கிருந்து வந்தது என்பதற்கு, இதுவரை விடை இல்லை.


சென்னை, ஆர்.கே.நகர் தேர்தலில், 89 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டது. கையும் களவுமாக பிடிபட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, கூட்டம் கூட்டி, எங்களிடம் கருத்து கேட்பதை விட, ஏற்கனவே நடந்த தவறுகள் நடக்காமலிருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தினோம்.

அரசு அதிகாரிகள், தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான பின், முன்தேதியிட்டு மாற்றப்படுகின்றனர். இது, தடுத்து நிறுத்தப்பட வேண்டும். 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, தபால் ஓட்டு என்பது, சந்தேகத்திற்குரியதாக உள்ளது. இந்த முறையை நீக்க வேண்டும்.

நிறைவேற்ற முடியாத திட்டங்களை, 27ம் தேதி, முதல்வர் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்புக்கு, கவர்னர் ஒப்புதல் கொடுத்துள்ளார். இது, மிகப்பெரிய மோசடி. தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓட்டு எண்ணிக்கையை தாமதப்படுத்துவது அர்த்தமற்றது. அந்தந்த சட்டசபை தொகுதியில், ஓட்டுகளை எண்ண வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


போராட்டம் நடத்தலாமா?இதேபோல, சென்னையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம், மாநகராட்சி அம்மா மாளிகையில் நேற்று நடந்தது. சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரகாஷ் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில், அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சேகர்பாபு, தாயகம் கவி ஆகியோர் அளித்த பேட்டி: ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு வழங்க, பரிசு பொருட்கள் பதுக்கி வைக்கப்படுவதாக, 28ம் தேதி காலை, 11:00 மணிக்கு புகார் அளித்தோம். பறக்கும் படையினர் மாலை, 4:00 மணிக்கு தான், அந்த இடத்தை ஆய்வு செய்தனர். எனவே, புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூட்டத்தில் வலியுறுத்தினோம்.

தேர்தல் நேரத்தில், அரசால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராட்டம் நடத்தலாமா; சொந்த வீடுகளில் விளம்பரம் வைக்க அனுமதி உள்ளதா என, கேட்டோம். இதுகுறித்து விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என, மாவட்ட தேர்தல் அலுவலர் கூறியுள்ளார்.

மேலும், முதியோர், மாற்றுத் திறனாளிகளின் தபால் ஓட்டு அளிப்பது தொடர்பான விபரங்களையும் கேட்டுள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
02-மார்-202117:02:54 IST Report Abuse
Endrum Indian டாஸ்மாக்கானாட்டு "குடி" மக்களே எல்லா கட்சியிடமும் பணம் வாங்குங்கள் ஆனால் நல்லவர் என்று விசாரித்து தெரிந்து கொண்டு அவர் ஜன சேவைக்காக இதில் வருகின்றார் என்று தெரிந்து கொண்டு அவருக்கு மட்டுமே ஒட்டு போடுங்கள் இந்த முடிவை உடனே எடுக்கவும். நாடு நலம் பெரும்
Rate this:
Cancel
02-மார்-202109:44:33 IST Report Abuse
ஆரூர் ரங் 3கண்டெய்னர் பணமும் விசாகப்பட்டினம் ஸ்டேட் வங்கியுடையது என முழுமையான ஆடிட்டில் நிரூபிக்கப்பட்டு👍🏻 ரிசர்வ் வங்கி அங்கு ஒப்படைத்து 4 ஆண்டுக்கள் ஆகிவிட்டது. இதனைக் கேள்விபட்ட உபீஸ் அய்யோ நாம ☹ ஆட்டயப் போடமுடியாமப் போச்சேன்னு😢😢😢 அழுகிறான்.
Rate this:
Cancel
02-மார்-202109:39:50 IST Report Abuse
ஆரூர் ரங் ஆர் எஸ் பாரதிக்கு என்ன குறை? நேற்று கோர்ட்டில் வாங்கிக்😇 கட்டிக் கொண்டதைத் தவிர? பாவிப்பய கேசை மதுரையில் 😉போடாமல் மெட்ராஸ் மன்றத்தில் போட்டு மாட்டிவிட்டாரே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X