அரசியல் செய்தி

தமிழ்நாடு

எல்லாவற்றையும் இழந்து நிற்கும் முதல்வர்: ராகுல் வருத்தம்

Added : மார் 02, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
கன்னியாகுமரி : ''எல்லாவற்றையும் இழந்து நிற்கிறார் தமிழக முதல்வர்,'' என, காங்., முன்னாள் தலைவர் ராகுல் பேசினார்.காங்., முன்னாள் தலைவர் ராகுல், கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். சர்ச் ரோடு சந்திப்பு, தக்கலை மற்றும் மார்த்தாண்டத்தில் அவர் பேசியதாவது: தமிழக முதல்வர் இ.பி.எஸ்., மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தாமல், மோடி சொல்வதை செய்பவராக
 எல்லாவற்றையும் இழந்து நிற்கும் முதல்வர்: ராகுல் வருத்தம்

கன்னியாகுமரி : ''எல்லாவற்றையும் இழந்து நிற்கிறார் தமிழக முதல்வர்,'' என, காங்., முன்னாள் தலைவர் ராகுல் பேசினார்.

காங்., முன்னாள் தலைவர் ராகுல், கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். சர்ச் ரோடு சந்திப்பு, தக்கலை மற்றும் மார்த்தாண்டத்தில் அவர் பேசியதாவது: தமிழக முதல்வர் இ.பி.எஸ்., மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தாமல், மோடி சொல்வதை செய்பவராக இருப்பது வருத்தம் அளிக்கிறது. கொரோனா காலத்தில், சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்களுக்கு ஒரு ரயில் டிக்கெட் கூட இலவசமாக கொடுக்கவில்லை. முதல்வர் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறார்.

தமிழர்களை தவிர பிறர் ஆட்சி நடத்தினால், தமிழ் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பது வரலாறு. இந்த தேர்தலில், நாம் அதை பின்பற்ற வேண்டும். தமிழ் மக்களை உண்மையாக முன்னிறுத்தி செயல்படுபடுவர் யாரோ அவர் தான், முதல்வராக வர வேண்டும்.தமிழை களங்கப்படுத்த முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ்-.,சுக்கு நாம் வழிவிட்டு விடக் கூடாது. மோடியும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் சிறுமைப்படுத்த முயற்சிக்கின்றனர்.

காங்கிரசில் உறுதியாக நின்றவர் வசந்தகுமார். அஞ்சாமல் காங்கிரஸ் பின் உறுதியாக நின்றதால், அவரை நினைவு கூர்கிறோம். வலிமை வாய்ந்த, திறமை வாய்ந்த மனிதரை காங்., இழந்திருக்கிறது. நான், காமராஜர் வரலாற்றை படித்தேன். அவர் முதல்வராக இருந்த போது, அவருக்கு சொந்தமான பொருட்கள் அனைத்தும் ஒரு சூட்கேசுக்குள் இருந்ததை படித்த போது, நெகிழ்ந்து போனேன். காமராஜர் காலம், மீண்டும் தமிழகத்தில் பிரதிபலிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

பின், முளகுமூடு பகுதியில் உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி மாணவர்களிடையே கலந்துரையாடினார். அப்போது, மாணவியருடன் ராகுல் நடனமாடினார். அவருடன் மாநில காங்., தலைவர் அழகிரி, மாநில மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோரும் ஆடினர். பின், உடலை பேணுவது குறித்து கேட்ட மாணவி முன், ஒரு கையால் தண்டால் எடுத்த ராகுலை பலரும் பாராட்டினர்.


சிறுவன் வீட்டிற்கு சென்ற ராகுல்

கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வரும் வழியில், கொட்டாரம் அருகே ரோட்டோர கடையில் ராகுல், 'நுங்கு' சாப்பிட்டார். மிகவும் சுவையாக உள்ளதாக தெரிவித்தார்

 தக்கலை அருகே பரைக்கோடு கிராமத்தில், ரோட்டோர பேக்கரி கடைக்குள் திடீரென சென்றார். அப்போது, பூங்கொத்து வைத்திருந்த சிறுவன் ஜோசப்பிடம் படிப்பு குறித்து கேட்டார். அவன், தான் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தான்.

 'உன்னிடம் ஷூ உள்ளதா' என கேட்டார். 'இல்லை' என சிறுவன் பதில் கூற, ஷூ சைஸ் கேட்டு வாங்கி தருவதாக உறுதிஅளித்தார். அச்சிறுவனின் வீடு அருகில் உள்ளதாக கூற, அவன் வீட்டிற்கும் நடந்தே சென்று, குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்தார்

 வசந்தகுமார் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்திய ராகுல், அவரது மனைவிக்கு ஆறுதல் கூறினார்.

 தேங்காப்பட்டணத்தில் படகில் சென்று, மீனவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படகுக்கான அனுமதி மீன்வளத் துறையில் பெறப்படவில்லை எனக் கூறி, அந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.


குற்றாலத்தில் ராகுல்; பொதுமக்கள் அவதி


கடந்த மூன்று தினங்களாக, தென் மாவட்டங்களில் ராகுல் தேர்தல் பிரசாரம் செய்தார். முதல் நாள் துாத்துக்குடி, நேற்று முன்தினம் நெல்லை, தென்காசியில் பிரசாரம் செய்த அவர், இரவு பழைய குற்றாலத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார்.நேற்று காலை, 10:00 மணியளவில், பழைய குற்றாலத்தில் இருந்து, காரில் தென்காசி சென்றார். அங்கிருந்து, ஹெலிகாப்டரில், கன்னியாகுமரி பிரசாரத்திற்கு சென்றார்.

முன்னதாக, நேற்று காலை, 6:00 முதல் 10:00 மணி வரை, பழை குற்றாலம் சாலையில் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அனுமதிக்கப்படவில்லை. ஆயிரப்பேரி, மத்தளம்பாறை பகுதி விவசாய தொழிலாளர்கள், பால் வியாபாரிகள், என யாரும் பழைய குற்றாலம் வழியாக தென்காசி, இலஞ்சிக்கு செல்ல, போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால், அவர்கள் விரக்தி அடைந்தனர்.பழைய குற்றாலம் அருவியில் குளிக்கவும், யாரையும் அனுமதிக்கவில்லை. ராகுல் பாதுகாப்பு கருதி, அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். ராகுல் சென்றதும், அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv ,srinivasankrishnaveni - bangalore,இந்தியா
04-மார்-202112:10:34 IST Report Abuse
skv ,srinivasankrishnaveni அச்சச்சோ திரு EPS அவர்களே ரொம்பவெபாவமாயிருக்கே ராகுல் கண்டுபிடிச்சுட்டாரு நீஈங்க ஒரு பாப்பர் னு சொல்லின்ன்டு போயிட்டே இருக்காருங்க பாத்துண்ணே இருங்க இன்னம் ரெண்டு நாளைக்குள்ள உங்களுக்கு 2மில்லியன் க்கு செக்கு வந்துரும் ஜாக்ரதையாக வச்சுக்குங்க ஆர் தேர்தல் சிலாவுக்கு யூஸ் பண்ணுங்க ஐயா
Rate this:
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
03-மார்-202117:09:27 IST Report Abuse
S.P. Barucha எல்லாவற்றையும் இழந்து நிற்கிறார் தமிழக முதல்வர்- உண்மை.
Rate this:
Cancel
Krishnan - Bengaluru,இந்தியா
02-மார்-202122:33:13 IST Report Abuse
Krishnan முதலில் அவருடைய Congress தலைவர்களே அவரைவிட்டு பிரிந்திருக்கிறார்கள். அதைப்பற்றி Rahul முதலில் வருத்தமடையட்டும். அதனபிறகு பழனிச்சாமியை பற்றி கவலைப்படட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X