இது உங்கள் இடம்: திராவிட கட்சிகள் ஏன் துடிக்கின்றன?

Updated : மார் 02, 2021 | Added : மார் 02, 2021 | கருத்துகள் (102) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :என்.உமா மகேஸ்வரி, மதுரையிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திடம், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே வழங்கியுள்ளார். அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என, தி.மு.க.,வினர் அதிருப்தியில் இருந்தனர்.
இது உங்கள் இடம், திராவிட கட்சிகள், ஸ்டாலின்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :


என்.உமா மகேஸ்வரி, மதுரையிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திடம், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே வழங்கியுள்ளார். அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என, தி.மு.க.,வினர் அதிருப்தியில் இருந்தனர். இருந்தாலும் மனம் தளராமல், இரண்டாவது ஊழல் பட்டியலையும், தி.மு.க., தற்போது கொடுத்துள்ளது. இதில், ஐந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ., ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஐயா புண்ணியவான்களே... 'ஊழல்' என்ற வார்த்தை, மக்களுக்கு அறிமுகமானதே, தி.மு.க., ஆட்சியில் தான் என்பதை மறந்து விடாதீர்.தி.மு.க., ஆட்சிக் காலத்தில், கவுன்சிலர் எல்லாம், அரசு அதிகாரிகளை மிரட்டி, காரியம் சாதித்தனர்; அரசு திட்டங்களில், கமிஷன் அடித்து கொழுத்தனர்; அவர்களுக்கு ஒத்துழைக்காத அதிகாரிகள், பந்தாடப்பட்டனர்.'விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதில் சாமர்த்தியசாலி' என, சர்க்காரியா கமிஷனால், 'பாராட்டு' பெற்றவர், கருணாநிதி. 'கொள்ளையடிப்பதும் ஒரு கலை' எனச் சொன்னவரும், அவர் தானே!

கட்சியின் மாவட்டச் செயலர்கள் குவித்த சொத்துக்களை பார்த்து, கருணாநிதியே ஆச்சரியம் அடைந்தாரே!கருணாநிதியின் வாரிசுகளிடம் இருக்கும் சொத்து, தமிழகத்தில் வேறு யாரிடமாவது இருக்கிறதா? இதற்கெல்லாம், தி.மு.க.,வினர் பதில் சொன்னால் போதும்.ஒரு விலைமாது மீது, சிலர் கற்களை எறிய எத்தனித்த போது, 'உங்களில் யார் பாவம் செய்யாத பரம யோக்கியனோ, அவன் இந்த விலைமாது மீது கல் எறியட்டும்' என, இயேசு சொன்னாராம்; அதனால், ஒருவரும் கல் எறியவில்லை.


latest tamil newsஅதுபோல, ஊழல் குறித்து, தி.மு.க., புகார் அளிக்க யோக்கியதை இருக்கிறதா?ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளான, தி.மு.க.,வினரும், அ.தி.மு.க.,வினரும் கொள்ளை அடித்ததில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? இரு கட்சியினரும், தமிழகத்தைப் போண்டி ஆக்கி விட்டனர். அக்கட்சிகள், மீண்டும் ஆட்சிக்கு வர துடிப்பது, மக்கள் சேவை செய்யவா... இல்லவே இல்லை. தமிழகத்தில் மிச்சம் மீதி இருக்கும் வளங்களையும் கொள்ளையடிக்கவே துடிக்கின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (102)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Kettavan - Madurai,இந்தியா
02-மார்-202123:22:44 IST Report Abuse
Nallavan Kettavan Both the parties are waste.. they are using middle man tax and offering more freebies to gain their votes bank.
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
02-மார்-202123:18:03 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN மதம் மற்றும் மத நம்பிக்கைகளுக்கு எதிராக வேண்டுமென்றே வெறுப்பினை உள்நோக்கத்துடன் விதைத்தால் அது தண்டனைக்குரிய குற்றம் என்கிறது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 295-A நீதிமன்ற வாரண்ட் இல்லாமலேயே காவல்துறை இந்தக் குற்றத்துக்காக ஒருவரைக் கைது செய்ய இயலும்.
Rate this:
Cancel
seth - pondi,இந்தியா
02-மார்-202122:51:35 IST Report Abuse
seth இந்த இரண்டு கட்சியில் எது நன்றாக செயல் படுகிறதோ அதை தேர்தெடுக்க வேண்டும். இரெண்டும் ஒன்று அல்ல,,, ஊழல் , சட்டம் ஒழுங்கு , மின்சாரம் , குடும்ப அரசியல் , இந்து விரோதம் , சிறுபான்மையோர் ஒற்றுமை , கார்பொரேட் மூலம் நன்மை ,மத்திய அரசுடன் நல்லிணக்கம் என பல வழிகளில் இரண்டும் வேறுபட்டு உள்ளதால்- எது நன்மை பயக்கும் என நினைக்கிறோமோ அவர்களுக்கு ஒட்டு போட வேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X