அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓரிரு நாளில் தொகுதி பங்கீடு: பா.ஜ., முருகன் உறுதி

Updated : மார் 02, 2021 | Added : மார் 02, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
சென்னை : ''எங்கள் கூட்டணியின் தொகுதி பங்கீடு பற்றிய முழு விபரமும், ஓரிரு நாட்களில் தெரிய வரும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் கூறினார்.சென்னை, தி.நகரில் உள்ள பா.ஜ., அலுவலகத் தில், முருகன் முன்னிலை யில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி எம்.விஜயகுமார், நேற்று பா.ஜ., வில் இணைந்தார். அவர், தமிழக அரசின், 'எல்காட்' நிறுவனம் உட்பட, பல துறைகளில் பணிபுரிந்துள்ளார்.பின், முருகன்
BJP, Murugan, TN election

சென்னை : ''எங்கள் கூட்டணியின் தொகுதி பங்கீடு பற்றிய முழு விபரமும், ஓரிரு நாட்களில் தெரிய வரும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் கூறினார்.

சென்னை, தி.நகரில் உள்ள பா.ஜ., அலுவலகத் தில், முருகன் முன்னிலை யில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி எம்.விஜயகுமார், நேற்று பா.ஜ., வில் இணைந்தார். அவர், தமிழக அரசின், 'எல்காட்' நிறுவனம் உட்பட, பல துறைகளில் பணிபுரிந்துள்ளார்.

பின், முருகன் அளித்த பேட்டி:தமிழக அரசியலில், பா.ஜ.,வின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. அ.தி.மு.க., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி, ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது தான் இலக்கு. அதற்காக, பா.ஜ., உறுப்பினர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர்.எங்கள் கூட்டணி கட்சிகளின், தொகுதி பங்கீடு பற்றிய முழு விபரமும், ஓரிரு நாட்களில் தெரிய வரும். கூட்டணி பேச்சில், எந்த இழுபறியும் இல்லை.

அ.தி.மு.க., - அ.ம.மு.க., இணைவது பற்றி, நான் எதுவும் சொல்ல முடியாது. இணைப்பு குறித்து, அக்கட்சிகள் தான் முடிவு செய்ய வேண்டும். தமிழக தலைவராக, தமிழக தேர்தல் கள நிலவரம் குறித்து, தேசிய தலைமையிடம் தெரிவித்துள்ளேன். பா.ஜ., அரசு பொறுப்பேற்ற பின் தான், ஏழை மக்களுக்கு இலவசமாக சமையல் காஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இரு ஆண்டுகளில் மட்டும், எட்டு கோடி குடும்பங்களுக்கு, காஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.


latest tamil newsகொரோனா வைரஸ் காரணமாக, பல நாடுகளில் மந்தநிலை காணப்படுகிறது. பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும். அவற்றின் விலை குறைவை, அனைவரும் எதிர்பார்க்கிறோம். விலை ஏற்றம் நிரந்தரம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தமிழகம் வெல்வோம்


தமிழக பா.ஜ., சார்பில், 'வெற்றிக் கொடி ஏந்தி, தமிழகம் வெல்வோம்' என்ற பிரசார நிகழ்ச்சி, இன்று மாவட்டங்களில் நடக்கிறது. தேர்தல் பொறுப்பாளர்களான கிஷன் ரெட்டி, கோவையிலும்; வி.கே.சிங், மதுரையிலும் பங்கேற்கின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
02-மார்-202117:54:00 IST Report Abuse
J.V. Iyer பாஜகவை ஆதரிக்கும் நிறைய மக்கள் வோட்டு போட போகமாட்டார்கள். அவர்களை வோட்டு போட உழையுங்கள். அழையுங்கள். மேலும், நடுநிலையாக உள்ளவர்கள், யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்று தெரியாமல் விழிக்கின்றனர். அவர்களை விழித்தெழ செய்யுங்கள். உங்களுக்கு வெற்றி நிச்சயம்.
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
02-மார்-202113:05:59 IST Report Abuse
Malick Raja பங்கீடேல்லாம் சரியாதான் நடக்கும் .. வாக்குகள்தான் மற்ற கட்சிகளுக்கு போகும் இல்லையா L முருகன் அவர்களே .. இந்த தேர்தல் முடிந்தஉடன் அடுத்த தமிழக பாஜ க தலைவரை தேர்ந்தெடுப்பது மட்டும் உறுதி
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
02-மார்-202114:03:53 IST Report Abuse
Ellammanஅந்த நிலையில்...இதற்க்கு முன்னர் கிருபாநிதி என்று ஒருவர் இருந்தாரே... அதை விட மட்டமான நிலைக்கு தள்ளப்படுவார் இந்த எல் போர்டு...அவரை போலவே இந்த ஆசாமியும் தி மு க வில் ஐக்கியமானாலும் ஆச்சர்யம் இல்லை....
Rate this:
Nellai Ravi - Nellai,இந்தியா
02-மார்-202114:46:57 IST Report Abuse
Nellai Raviபிஜேபி இல் ஒரு தலித் கொஞ்ச நாட்களாவது, தலைவர் ஆஹ முடிகிட்டது. திமுக வில் முடியுமா ? தலித் வேண்டாம்யா. கலைஞர் குடும்பம் தவிர வேறு யாரவது தலைவராக முடியுமா ?...
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
02-மார்-202117:17:20 IST Report Abuse
Ellammanவளரவே வளர முடியவில்லை என்ற நிலையில் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற முறையில் எடுக்கப்படும் முடிவுகளில் எல்லாம் பெரிதாக எதிரிபார்க்கவேண்டாம். உயர் ஜாதி கட்சி என்ற அடையாளத்தை இது மாதிரி எத்தனை தலைவர்களை நியமித்தாலும் பீ ஜெ பீ யால் போக்கவே போக்க முடியாது. பீ ஜெ பீ யின் அடிப்படை கொள்கைகளை எப்படி மாற்ற முடியாதோ அப்படி.. இது போன்ற சில ஆட்களுக்கு சிறுகுழந்தைகளுக்கு மிட்டாய் கொடுப்பது போல பதவி கொடுத்து ஒரு அலங்கார பொறுப்பில் உட்காரவைத்து உங்களுக்கு வேண்டிய வேலைகளை பின்னணியில் செய்துகொள்வது பகுத்தறிவு பூமியில் உள்ள அனைவருக்கும் தெரியும்....
Rate this:
periasamy - Doha,கத்தார்
02-மார்-202118:13:18 IST Report Abuse
periasamyகலைஞர் தான் ஒரு தலித் என்று பலமுறை சொல்லியிருக்கார் அது சரிதானே அவர் தலித் வீட்டில் சம்பந்தம் செய்துள்ளார்...
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
02-மார்-202113:00:40 IST Report Abuse
Ellamman அப்போ நேற்று அமித் ஷா கூட்டணி பேரத்தை முடிவு செய்துவிட்டு கிளம்பினார் என்று இங்கே எழுதினார்கள்????அது??? அது??? அது??? இது தான் இருப்பதய் இல்லாதது போலவும்... இல்லாததை இருப்பது போலவும் எழுதும் தர்மமா???அமித் ஷா பெட்டிகளை மட்டும் தனி விமானத்தில் ஏற்றிக்கொண்டு போனாரா???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X