பொது செய்தி

இந்தியா

'கோ - வின்' இணையதளத்தில் முன்பதிவு; வழிகாட்டு ஆவணம் வெளியிட்டது அரசு

Updated : மார் 02, 2021 | Added : மார் 02, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி : 'கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களின் பயன்பாட்டுக்காகவே, 'கோ - வின் மொபைல் போன்' செயலி உருவாக்கப்பட்டுள்ளது. 'தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புபவர்கள், 'கோ - வின்' இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்' என, மத்திய சுகாதாரத்துறை நேற்று விளக்கம் அளித்தது.நாடு முழுதும் உள்ள, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்
CoWIN, Covid19 vaccine, registration

புதுடில்லி : 'கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களின் பயன்பாட்டுக்காகவே, 'கோ - வின் மொபைல் போன்' செயலி உருவாக்கப்பட்டுள்ளது. 'தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புபவர்கள், 'கோ - வின்' இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்' என, மத்திய சுகாதாரத்துறை நேற்று விளக்கம் அளித்தது.

நாடு முழுதும் உள்ள, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 'கார்மாபிடைட்டிஸ்' எனப்படும், இரண்டுக்கும் மேற்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்ட, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, கொரோனா தடுப்பூசி போடும் பணி, நேற்று துவங்கியது. இதையடுத்து, தடுப்பூசி செலுத்தும் பணிக்காக, மத்திய அரசு உருவாக்கியுள்ள, 'கோ - வின் மொபைல் போன்' செயலியை, நேற்று பலர் தரவிறக்கம் செய்ய முயன்றனர். இதன் காரணமாக, அந்த செயலி முடங்கும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, மக்களின் தகவலுக்காக, தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான வழிகாட்டுதல் ஆவணம் ஒன்றை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: கோ - வின் மொபைல் போன் செயலி, தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மற்றும் அது தொடர்பான பணிகளை கண்காணிப்பவர்களின் பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது. எனவே, 'கூகுள் ப்ளே ஸ்டோரில்' உள்ள கோ - வின் செயலியை, பொது மக்கள் தரவிறக்கம் செய்யத் தேவையில்லை.


latest tamil news



பொது மக்கள் பயன்பாட்டுக்காக, www.cowin.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதி உள்ளோர், அந்த இணையதளம் வாயிலாக, பதிவு செய்யலாம். அந்த இணையதளத்தில், உங்கள் மொபைல் எண் வாயிலாக, குடும்பத்தினரின் பெயருக்கும் முன்பதிவு செய்யலாம்.

முன்பதிவின் போது, புகைப்பட அடையாள அட்டை மற்றும் 'கார்மாபிடைட்டிஸ்' குறித்த டாக்டரின் சான்றிதழை தரவேற்றம் செய்ய வேண்டும். இந்த இணையதளம் தவிர, ஆரோக்கிய சேது செயலி மற்றும் தடுப்பூசி மையங்களுக்கு நேரில் சென்றும், முன்பதிவு செய்யலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


எங்கெங்கே மையங்கள்? வரைபடம் வெளியீடு


கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க துவங்கியது முதல், பரிசோதனை மற்றும் தனிமை முகாம்கள், தடை செய்யப்பட்ட மண்டலங்கள் குறித்த தகவல்களை, டில்லியைச் சேர்ந்த, 'மேப் மை இந்தியா' என்ற நிறுவனம், 'டிஜிட்டல்' வடிவில் வரைபடங்களுடன் வெளியிட்டது.

இந்நிலையில், நாடு முழுதும் உள்ள கொரோனா தடுப்பூசி செலுத்தும் அரசு மற்றும் தனியார் மையங்கள், எங்கெங்கு அமைந்துள்ளன என்ற விபரங்களை, 'மேப் மை இந்தியா' நிறுவனம், வரைபடத்துடன் வெளியிட்டுள்ளது. இந்த வரைபடம், 'கோ - வின்' முன்பதிவு இணையதளத்திலும் விரைவில் சேர்க்கப்பட உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
02-மார்-202114:03:10 IST Report Abuse
Ramesh Sargam இப்படி எல்லாம் 'கோ - வின்' இணையதளத்தில் முன்பதிவு, ஆரோக்ய சேது போன்றவற்றின் மூலம் மக்களை பதிவு செய்யுங்கள் என்று கூறுவதை விட்டு, மாவட்டங்களில் உள்ள வார்டுகளில் அல்லது சுகாதார மையங்களில் அல்லது வீடு வீடாக சென்று முதியவர்களுக்கும் மற்றும் வேறு உபாதை உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடலாமே. இப்பொழுதெல்லாம் போலியோ தடுப்பூசி சிறுவர்களுக்கு அப்படித்தானே போடுகிறார்கள். அதுபோல் செய்தால் என்ன?
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
02-மார்-202113:15:03 IST Report Abuse
Ramesh Sargam தகவலுக்கு மிக்க நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X