அரச குடும்பத்தை பிரிந்தது கடினமாக இருந்தது: ஹாரி

Updated : மார் 02, 2021 | Added : மார் 02, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
லாஸ் ஏஞ்சல்ஸ்: ''பிரிட்டன் அரச குடும்பத்தைவிட்டு நிரந்தரமாக விலகிய காலகட்டம் மிகவும் கடினமாக இருந்தது. இப்போது தான் நிம்மதியாக இருக்கிறோம்,'' என, இளவரசர் ஹாரி தெரிவித்தார்.பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேரனும், இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதியின் மகனுமான, இளவரசர் ஹாரி, அமெரிக்க நடிகை மேகன் மெர்க்கலை, 2018ல் காதலித்து திருமணம் செய்தார். இந்த திருமணத்தில் அரச
Harry, Meghan, Oprah Interview

லாஸ் ஏஞ்சல்ஸ்: ''பிரிட்டன் அரச குடும்பத்தைவிட்டு நிரந்தரமாக விலகிய காலகட்டம் மிகவும் கடினமாக இருந்தது. இப்போது தான் நிம்மதியாக இருக்கிறோம்,'' என, இளவரசர் ஹாரி தெரிவித்தார்.

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேரனும், இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதியின் மகனுமான, இளவரசர் ஹாரி, அமெரிக்க நடிகை மேகன் மெர்க்கலை, 2018ல் காதலித்து திருமணம் செய்தார். இந்த திருமணத்தில் அரச குடும்பத்தினருக்கு முழு சம்மதம் இல்லாததை அடுத்து, கருத்து வேறுபாடுகள் நிலவின. இதையடுத்து, பிரிட்டன் அரச குடும்பத்தில் இருந்து அதிகாரப்பூர்வமான விலகுவதாக, ஹாரி கடந்த ஆண்டு அறிவித்தார்.

'ஒரு ஆண்டுக்கு பின், இது குறித்து முடிவு அறிவிக்கப்படும்' என, ராணி எலிசபெத் தெரிவித்தார். ஹாரி - மேகன் தம்பதியை, அரச குடும்பத்தில் இருந்து நிரந்தரமாக விடுவிக்க சம்மதிப்பதாக, பிரிட்டன் அரச குடும்பத்தினர், சமீபத்தில் உறுதி செய்தனர். இந்நிலையில், பிரபல அமெரிக்க, 'டிவி' நிகழ்ச்சி தொகுப்பாளரான, ஓபரா வின்ப்ரேவின் நிகழ்ச்சியில், ஹாரி - மேகன் சமீபத்தில் பேட்டி அளித்தனர்.


latest tamil news



இந்த நிகழ்ச்சி, வரும், 7ம் தேதியன்று, அமெரிக்க, 'டிவி'க்களில் ஒளிபரப்பாக உள்ளது. அதன் விளம்பரங்கள் தற்போது வெளியாகி உள்ளன; அதில், ஹாரி கூறியிருப்பதாவது: என் மனைவியுடன் அமர்ந்து, இந்த நிகழ்ச்சியில் பேசுவதை நிம்மதியாக உணர்கிறேன். கடந்த ஓராண்டாக, அரச குடும்பத்தில் இருந்து விலகுவது தொடர்பான விவகாரங்கள் மிகவும் கடுமையாக இருந்தன. அது மேகனுக்கு எவ்வளவு கவலையை அளித்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. இப்போது தான் இருவருமே நிம்மதியாக இருக்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
02-மார்-202108:16:43 IST Report Abuse
Amirthalingam Sinniah ஒருவர் திருமணத்திற்காக முடியை துறந்தார். அவருடைய சகோதரனின் வாரிசு திருமணத்தின் நிமிர்த்தம் விலக்கிவைக்கப்பட்டுள்ளார்.
Rate this:
Cancel
02-மார்-202107:31:59 IST Report Abuse
டுமீலன் முட்டாள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X