பொது செய்தி

இந்தியா

தமிழகத்தில் கோடை எப்படி? வானிலை மையம் நல்ல செய்தி

Updated : மார் 02, 2021 | Added : மார் 02, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி : 'வரும் கோடைக் காலத்தில், பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை, தென் மாநிலங்களில், இயல்பை விட குறைவாக இருக்கும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மார்ச் முதல், மே மாதம் வரையிலான கோடைக் காலத்துக்கான கணிப்புகளை, இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ளது; அதில் கூறப்பட்டுள்ளதாவது: மார்ச் முதல், மே மாதம் வரையிலான கோடைக் காலத்தில், வடக்கு, வடமேற்கு,
TN,Tamilnadu, Weather,தமிழகம்,தமிழ்நாடு,வானிலை

புதுடில்லி : 'வரும் கோடைக் காலத்தில், பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை, தென் மாநிலங்களில், இயல்பை விட குறைவாக இருக்கும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மார்ச் முதல், மே மாதம் வரையிலான கோடைக் காலத்துக்கான கணிப்புகளை, இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ளது; அதில் கூறப்பட்டுள்ளதாவது: மார்ச் முதல், மே மாதம் வரையிலான கோடைக் காலத்தில், வடக்கு, வடமேற்கு, வடகிழக்கு மாநிலங்களில், பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட அதிகமாக இருக்கும்.


latest tamil news


கிழக்கு பிராந்தியம் மற்றும் மத்திய பிராந்தியத்தின் மேற்கு பகுதிகளிலும், இயல்பை விட அதிகமாக இருக்கும். சத்தீஸ்கர், ஒடிசா, குஜராத், மஹாராஷ்டிராவின் கடலோரப் பகுதிகள், கோவா மற்றும் ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில், பகல் நேர வெப்பநிலை, இயல்பை விட அதிகமாக இருக்கும்.

அதே நேரத்தில், தென் மாநிலங்கள் மற்றும் அதையொட்டியுள்ள மத்திய பிராந்தியத்தில், பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட குறைவாக இருக்கும்.இமயமலையை ஒட்டியுள்ள மாநிலங்கள், வட கிழக்கு மாநிலங்கள், மத்திய பிராந்தியத்தின் மேற்கு பகுதி, தென் மாநிலங்களில், இரவு நேர குறைந்தபட்ச வெப்பநிலை, இயல்பை விட அதிகமாக இருக்கும். மற்ற பகுதிகளில், இது இயல்பை விட குறைவாக இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Chennai,இந்தியா
02-மார்-202112:57:54 IST Report Abuse
Balaji பொதுவாகவே பொங்கலுக்கு அடுத்த நாளே பொங்க ஆரம்பிக்கும் சூரியன், இந்த வருடம் கடந்த இரண்டு நாளாகதான் பொங்குகிற மாதிரி தெரிகிறது. இதுவரை இரவுகள் சில்லென்றே இருந்தன. இப்போதும் விடியும் தருணம் இன்னும் சில்லென்ரே இருக்கிறது.. இதுவே நல்ல சகுனம் தான்..
Rate this:
Cancel
Atmavid - CHENNAI,இந்தியா
02-மார்-202112:52:04 IST Report Abuse
Atmavid eedo ok
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
02-மார்-202106:25:03 IST Report Abuse
oce கோடை வெப்பநிலை இங்கு குறைவா இருக்கும் அங்கு அதிகமா இருக்கும். இதெல்லாம் தேவையற்ற அறிவிப்பு. கோடை காலத்தில் புயல் வருமா கடல் பொங்குமா இந்தியா முழுமைக்கும் மற்ற அண்டை நாடுகளை விட சராசரி வெப்ப நிலை எப்படி இருக்கும் என்பதை மட்டும் ஆராய்ந்து சொன்னால் அதற் கேற்றபடி மக்கள் அன்றாட வாழ்வியல் நடப்புகளை சற்று மாற்றிக் கொள்ளலாம். இந்த துறையின் அறிவிப்புகளை வைத்து மக்கள் என்ன செய்ய முடியும். எதற்கும் பயன்படாத துறை எதற்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X