பொது செய்தி

இந்தியா

ரூ.4 லட்சம் கோடிக்கு 'ஸ்பெக்ட்ரம்' ஏலம்?

Updated : மார் 02, 2021 | Added : மார் 02, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி : மொபைல் போன் சேவைக்கான, 'ஸ்பெக்ட்ரம்' எனப்படும், அலைக்கற்றை ஏலம் துவங்கியுள்ளது. மொத்தம், 3.92 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஸ்பெக்ட்ரம், ஏலம் விடப்பட உள்ளது.மொபைல் போன் சேவைகளுக்கான ஸ்பெக்ட்ரம் ஏலம் விடும் பணி துவங்கியுள்ளது. தற்போது, ஏழு வகையான அலைவரிசைகள் ஏலம் விடப்படுகின்றன. 700 மெகா ஹெர்ட்ஸ் முதல், 2,500 மெகாஹெர்ட்ஸ் வரையிலான, அலைவரிசைகள் ஏலம்
Spectrum, India, Spectrum Auction, ஸ்பெக்ட்ரம், ஸ்பெக்ட்ரம் ஏலம்

புதுடில்லி : மொபைல் போன் சேவைக்கான, 'ஸ்பெக்ட்ரம்' எனப்படும், அலைக்கற்றை ஏலம் துவங்கியுள்ளது. மொத்தம், 3.92 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஸ்பெக்ட்ரம், ஏலம் விடப்பட உள்ளது.

மொபைல் போன் சேவைகளுக்கான ஸ்பெக்ட்ரம் ஏலம் விடும் பணி துவங்கியுள்ளது. தற்போது, ஏழு வகையான அலைவரிசைகள் ஏலம் விடப்படுகின்றன. 700 மெகா ஹெர்ட்ஸ் முதல், 2,500 மெகாஹெர்ட்ஸ் வரையிலான, அலைவரிசைகள் ஏலம் விடப்படுகின்றன.

இந்த ஏலத்தில், '5ஜி' தொழில்நுட்பத்துக்கான, 3,300 - 3,600 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசைகள் இடம்பெறவில்லை. அதற்கான ஏலம் தனியாக நடக்கும் என, தெரிகிறது. இந்த ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனம், முழு ஏலத் தொகையை மொத்தமாக செலுத்தலாம் அல்லது அலைவரிசைக்கு ஏற்ப, 25 முதல், 50 சதவீத ஏலத் தொகையை முதலில் செலுத்த வேண்டும்.


latest tamil news



இந்த ஏலம், 20 ஆண்டுகளுக்கானது என, அறிவிக்கப்பட்டுள்ளது.'ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன்' ஆகிய நிறுவனங்கள், இந்த ஏலத்தில் பங்கேற்கின்றன. இந்த நிறுவனங்கள், முன் வைப்புத் தொகையாக, 13 ஆயிரத்து, 475 கோடி ரூபாயை செலுத்தியுள்ளன. அதில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மட்டும், 10 ஆயிரம் கோடி ரூபாயை செலுத்தியுள்ளது. மொத்தம், 3.92 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஸ்பெக்ட்ரம், ஏலம் விடப்பட உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
02-மார்-202117:56:02 IST Report Abuse
J.V. Iyer அ. ராசா, மற்ற திமுக எம்.பி.க்களுக்கு நாக்கில் ஜொள்ளு வடியும். புறம் கையை ருசி பார்க்க முடியாது..
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
02-மார்-202117:47:20 IST Report Abuse
Lion Drsekar இதே அளவுக்கு மோசடி என்று ஒரு செய்தி வந்தது பிறகு அவர்கள் நிரபராதி என்று விடுவிக்கபப்ட்டனர், ஆகவே இதில் எது உண்மை எது பொய் ?? வாழ்க ஜனநாயகம், வந்தே மாதரம்
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
02-மார்-202116:06:59 IST Report Abuse
ஜெயந்தன் ஏண்டா ..2g spectrum திலேயே 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி வந்திருக்க வேண்டியது என்று சொன்னீர்களே..இப்போதுவெறும் 4 லட்சமா தானா ..அதுவும் 20 வருடங்களுக்கு ... அடுத்த ஆட்சி வந்தால் இதை விசாரிக்க வேண்டும்..
Rate this:
enkeyem - sathy,இந்தியா
02-மார்-202121:50:39 IST Report Abuse
enkeyemநான்கு லட்சம் அல்ல. நான்கு லட்சம் கோடி. நான்கு லட்சம் கோடி பெரியதா இல்லை ஒரு லட்சத்து எழுபது ஆறாயிரம் கோடி பெரியதா அவசர குடுக்கை?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X