அரசியல் செய்தி

தமிழ்நாடு

"அந்த 2வது குற்றவாளியை நீங்கதான் முதல் ஆளா போய் பார்த்துட்டு வந்தீங்க. ஏன் இப்படி நாடகம் போடுறீங்க... "

Updated : மார் 02, 2021 | Added : மார் 02, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
முன்னாடி, ஜெயிலுக்கு போனால் வெட்கப்படுவோம். ஜெயலலிதாவை, குற்றவாளின்னு தீர்ப்பளித்த பின், 'அது தான் தேர்தலில் தோற்கடித்து விட்டோமே; அப்புறம் எதற்கு தண்டனை' என கேட்டனர். அந்தம்மா வசித்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுகின்றனர். அந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியான சசிகலா, சிறையிலிருந்து வரும் போது, 23 மணி நேரம் வரவேற்பு அளிக்கிறாங்க. மக்களின் இந்த மனநிலையை எப்படின்னு
மார்க்சிஸ்ட், பொலிட்பீரோ உறுப்பினர், பிரகாஷ் காரத்,
சினிமா இயக்குனர், அமீர்,அ.தி.மு.க.,   செய்தி தொடர்பாளர், வைகை செல்வன்,சமத்துவ மக்கள் கட்சி, நடிகர் சரத்குமார், நடிகர் விஜய், எஸ்.ஏ.சந்திரசேகர்

முன்னாடி, ஜெயிலுக்கு போனால் வெட்கப்படுவோம். ஜெயலலிதாவை, குற்றவாளின்னு தீர்ப்பளித்த பின், 'அது தான் தேர்தலில் தோற்கடித்து விட்டோமே; அப்புறம் எதற்கு தண்டனை' என கேட்டனர். அந்தம்மா வசித்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுகின்றனர். அந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியான சசிகலா, சிறையிலிருந்து வரும் போது, 23 மணி நேரம் வரவேற்பு அளிக்கிறாங்க. மக்களின் இந்த மனநிலையை எப்படின்னு புரிந்து கொள்வது?
-சினிமா இயக்குனர் அமீர்


'அந்த இரண்டாவது குற்றவாளியை, நீங்க தான், முதல் ஆளா போய் பார்த்துட்டு வந்தீங்க; ஏன் இப்படி நாடகம் போடுறீங்க...' என, காட்டமாக கேட்கத் தோன்றும் வகையில், சினிமா இயக்குனர் அமீர் பேட்டி



இந்தியாவை ஒரு கட்சி மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும் என்பது தான், பா.ஜ.,வின் தலைமை அமைப்பான, ஆர்.எஸ்.எஸ்., எண்ணம். அதனால் தான், அதற்கு எதிராக குரல் கொடுத்த, 100க்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் பிரகாஷ் காரத்


'அப்படி சிறையில் அடைக்க வேண்டும் என்றால், காங்., - கம்யூ.,க்கள், திரிணமுல் காங்., போன்றோரைத் தானே பிடித்து உள்ளே போட வேண்டும்... நீங்கள் சொன்ன, 100 பேரும், நகர்ப்புற நக்சல்கள் என்றல்லவா கூறப்படுகிறது...' என, போட்டுத் தாக்க துாண்டும் வகையில், மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் பிரகாஷ் காரத் பேச்சு



வன்னியர் ஜாதியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கியது, அவசரமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை இல்லை. நீண்ட காலமாக அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதற்கான சூழல் இப்போது தான் அமைந்தது. அதனால், அரசாணை பிறப்பித்து செயல்படுத்தினோம்.
-அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் வைகை செல்வன்


latest tamil news




'அடுத்து, இன்னொரு பெரிய ஜாதியினர், உள் ஒதுக்கீடு கேட்டு, தேர்தலை புறக்கணிப்போம் என்பர்; என்ன செய்வீர்கள்...' என, கிடுக்கிப் போடும் வகையில், அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் பேட்டி



எனக்கும், சசிகலாவுக்கும், 25 ஆண்டு கால நட்பு உண்டு. ஜெ.,வை சந்திக்க செல்லும் போதெல்லாம் அவர் தான் என்னை வரவேற்பார். என் மனைவி ராதிகாவுக்கும், சசிகலாவை நன்கு தெரியும். நான்காண்டு சிறை தண்டனை பெற்று திரும்பியுள்ளாரே என பார்க்கச் சென்றேன்
-சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார்


'உங்கள் நட்பு ஆழமானது என்பது, இப்போது தான் தெரிய வருகிறது. உங்களைப் போன்றவர்கள் செயலால் தான், அரசியலில் நீதி, நேர்மை, கண்ணியம் போன்றவை கடைச்சரக்காகி வருகிறது...' என, காட்டமாக கூறத் துாண்டும் வகையில், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார்



என் மகன் விஜய், என்னை சந்தித்து பேசி, நான்கு மாதம் ஆகி விட்டது; என் மீது கோபத்தில் இருக்கிறார். எனக்கு எதிராக அவரை சிலர் உசுப்பேற்றி விடுகின்றனர். நான் எந்த தவறும் செய்யவில்லை. மனம் திரும்பி அவர் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது.
-நடிகர் விஜயின் தந்தை, எஸ்.ஏ.சந்திரசேகர்


'தந்தைக்கு ஒன்று என்றால், படங்களில் உங்கள் மகன், எதிராளியை உண்டு, இல்லை என பார்த்து விடுவாரே; அவரா இப்படி...' என, அதிர்ச்சி தெரிவிக்கத் தோன்றும் வகையில், நடிகர் விஜயின் தந்தை, எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
03-மார்-202105:29:25 IST Report Abuse
Matt P உள் ஒதுக்கீடு, தள்ளுபடி எல்லாவற்றுக்கும் சூழல் தேர்தல் நெருங்கி வரும்போது தான் வருகிறது.இருபத்தைந்து ஆண்டுகால நட்பு கூட அப்படித்தான் .. அம்மாவை போய் பார்த்தால் அவங்க சமுதாய வாக்குகள் விழாதா என்று தான்... எங்கேயும் இப்போதும் எப்போதும் அரசியல் தான் வாழ்க்கை என்று ஆகிவிட்டது வசதி வந்து விட்டால். சினிமா இயக்குனர் நடிகர்கள் ...எல்லோருக்கும் நடித்து களைத்து விட்டால் சாய்வதற்கு ஒரு தூண் மாதிரி அரசியல். ஆகிவிட்டது.
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
02-மார்-202119:46:32 IST Report Abuse
sridhar தேச விரோத சதிசெயல் , குண்டு வெடிப்பு செய்பவர்களுக்கு அமீர் ஆதரவு தரவில்லையா ? அது மட்டும் நியாயமா . சசிகலா ஊழல் செய்தார், ஆனால் தேச விரோதி இல்லை.
Rate this:
raja - Kanchipuram,இந்தியா
03-மார்-202107:35:22 IST Report Abuse
rajaதேச விரோதிக்கும் ஊழலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. சொல்ல போனால் ஊழல் நேரடியாக சாதாரண மக்களை பாதிக்கும் செயல்...
Rate this:
Cancel
HoneyBee - Chittoir,இந்தியா
02-மார்-202116:09:52 IST Report Abuse
HoneyBee சோசப்பு சினிமாவில மட்டுமே நிஜம்.. வெளி வேடதாரி..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X