சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

விரயத்திலிருந்து பிறக்கும் அழகு

Added : மார் 02, 2021
Share
Advertisement
ஐரோப்பாவில் காய்கறிகள் மற்றும் பழங்கள் வீணடிக்கப்படுவது ஒரு பெரிய பிரச்னை. அங்கே, விளைபொருட்கள் உண்ணும் நிலையில் இருந்தாலும், பார்வைக்கு வாடியது போல இருந்தால் போதும். கடைக்காரர்கள், அலமாரியில் வைத்து விற்க தகுதியில்லாதவை என்று அவற்றை ஒதுக்கிவிடுவர்.இப்படி மறுக்கப்படும் காய்கனிகளை ஸ்பெயினிலுள்ள, 'பண்டாசியோ எஸ்பிகோலாடோர்ஸ்' என்ற லாப நோக்கமற்ற அமைப்பு
 விரயத்திலிருந்து பிறக்கும் அழகு

ஐரோப்பாவில் காய்கறிகள் மற்றும் பழங்கள் வீணடிக்கப்படுவது ஒரு பெரிய பிரச்னை. அங்கே, விளைபொருட்கள் உண்ணும் நிலையில் இருந்தாலும், பார்வைக்கு வாடியது போல இருந்தால் போதும். கடைக்காரர்கள், அலமாரியில் வைத்து விற்க தகுதியில்லாதவை என்று அவற்றை ஒதுக்கிவிடுவர்.

இப்படி மறுக்கப்படும் காய்கனிகளை ஸ்பெயினிலுள்ள, 'பண்டாசியோ எஸ்பிகோலாடோர்ஸ்' என்ற லாப நோக்கமற்ற அமைப்பு சேகரித்து, வேறு பொருட்களாக மாற்றி விற்க முயன்று வருகிறது.அந்த அமைப்பிடமிருந்து ஆரஞ்சுகளை வாங்கி, அவற்றிலிருந்து நான்கு அழ சாதனப் பொருட்களை உருவாக்கியிருக்கிறார் ஜூலியா ரோகா வெரா.

ஸ்பெயினில் உடை வடிவமைப்பு மாணவியான அவர், 'லெய்க்' என்ற பெயரில் அந்த பொருட்களை விற்கவும் துவங்கிவிட்டார். ஸ்பெயினில் பேசப்படும் கடலான் மொழியில், 'லெய்க்' என்றால் 'அசிங்கம்' என்று பொருள்.இயற்கையின் படைப்பில் எதுவும் அசிங்கமில்லை. ஆனால், மனிதன்தான் அழகு அசிங்கம் என்ற இரு அளவுகோல்களை வைத்து, சக உயிர்களை சித்தரவதை செய்கிறான் என்கிறார் ஜூலியா.விரயமாகும் காய்கனிகளுக்கு, புதிய அவதாரம் கொடுத்திருக்கும் அவருக்கு, ஸ்பெயினிலும், ஐரோப்பாவிலும் பாராட்டுகள் குவிகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X