சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

ஹைட்ரஜன் கண்டு வரும் ஏற்றம்!

Added : மார் 02, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தாத எரிபொருள் எது? ஹைட்ரஜன். இது மாசு எதையும் வெளிப்படுத்தாமல் முற்றிலுமாக எரிந்துவிடும். கடைசியில் நீர்த்திவலைகள் மட்டுமே எஞ்சும்.இதனால் ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்தும் ஆய்வுகள் அதிகரித்து வருகின்றன.குறிப்பாக, ஹைட்ரஜனை நீரிலிருந்து பிரிப்பது, அதற்கு தேவையான மின்சாரத்தை சூரிய ஒளியிலிருந்து பெறுவது போன்ற முறைகளால் பெறப்படும்
 ஹைட்ரஜன் கண்டு வரும் ஏற்றம்!

சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தாத எரிபொருள் எது? ஹைட்ரஜன். இது மாசு எதையும் வெளிப்படுத்தாமல் முற்றிலுமாக எரிந்துவிடும். கடைசியில் நீர்த்திவலைகள் மட்டுமே எஞ்சும்.இதனால் ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்தும் ஆய்வுகள் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக, ஹைட்ரஜனை நீரிலிருந்து பிரிப்பது, அதற்கு தேவையான மின்சாரத்தை சூரிய ஒளியிலிருந்து பெறுவது போன்ற முறைகளால் பெறப்படும் ஹைட்ரஜனை, 'பசுமை ஹைட்ரஜ' என்றே விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள்.உலக ஹைட்ரஜன் கவுன்சிலின் கணக்குப்படி, மாற்று எரிசக்தி முறைகளை பயன்படுத்துவது மற்றும் இதர புதிய நுட்பங்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனால் ஹைட்ரஜனின் உற்பத்தி செலவு வேகமாக குறைந்து வருகிறது.

உலகெங்கும் தற்போது புதிதாக, 228 ஹைட்ரஜன் எரிபொருள் ஆலைகள் கட்டப்பட்டு வருகின்றன.இவற்றில் பெரும்பாலானவற்றுக்கு கட்டுமான வேலைகள், கடந்த ஓராண்டுக்குள் துவங்கப்பட்டன.இவற்றின் முதலீட்டு மதிப்பு, 300 பில்லியன் டாலர்கள் என்கிறது, ஹைட்ரஜன் கவுன்சில். ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில், லாரி, ரயில் மற்றும் கார் போன்ற போக்குவரத்துகளுக்கு ஹைட்ரஜன் இயந்திரங்களை உருவாக்கி சோதனைகள் நடந்து வருகின்றன. அடுத்த, 10 ஆண்டுகளில், ஹைட்ரஜன் யுகம் பிறக்கும் என, வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthik - Doha,கத்தார்
04-மார்-202115:47:15 IST Report Abuse
Karthik நீரிலுள்ள ஆக்சிஜெனைப் பிரித்தால் ஹைட்ரஜன் வருவது சரி. அதனால், நீர் தீர்ந்து போகாதா?
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
05-மார்-202113:21:50 IST Report Abuse
Sridharசும்மா விட்டாலும் ஆவியாய் போகுதே? எல்லாமே சுழற்சி தானே? இன்னும் சொல்லப்போனால், காற்றுமண்டலத்தில் ஆக்சிஜென் அளவு பெருகுமே? அது பெரிய விஷயம் இல்லையா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X