விண்வெளியில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட கருந்துளை, முன்பு மதிப்பிட்டதைவிட அளவில் மிகப் பெரிதாக இருப்பதாக, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த, 1964ல் கண்டுபிடிக்கப்பட்ட, 'சைக்னஸ் எக்ஸ்-1' என்ற கருந்துளையை விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.இந்த ஆய்வுகளில் ஒன்று, அண்மையில் பூமிக்கும், சைக்னஸ் எக்ஸ்-1 கருந்துளைக்கும் இடையில் உள்ள தொலைவை துல்லியமாக அளந்தது.இதற்கு அமெரிக்காவிலுள்ள, 10 ரேடியோ தொலைநோக்கிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, 6 நாட்களுக்கு பயன்படுத்தப்பட்டன.இந்த ஆய்வுகளின் மூலம் பூமிக்கும் சைக்னஸ் எக்ஸ்-1க்கும் இடையே உள்ள தொலைவு, 7,240 ஒளி ஆண்டுகள் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்.
இதன் முந்தைய மதிப்பீடு, 6,100 ஒளி ஆண்டுகள்.அதேபோல, சைக்னஸ் எக்ஸ்-1 கருந்துளையின் நிறையையும் விஞ்ஞானிகள் முன்பு கணக்கிட்டிருந்தனர். அதன்படி, அந்தக் கருந்துளையின் நிறை, நமது சூரியனின் நிறையை விட, 10 மடங்கு அதிகம்.ஆனால் புதிய தொலைவு கணக்கின்படி, சைக்னஸ் எக்ஸ்-1ன் நிறை நமது சூரியனைவிட, 20 மடங்கு அதிகம் என, விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE