சென்னை: தமிழகத்தில், ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் வீதம் 234 தொகுதிகளுக்கும் 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளதாவது: தமிழகத்தில், ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள், 3 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 234 தொகுதிகளுக்கும் 702 பறக்கும் படைகளும், 702 கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒர வீடியோ குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.

பாதுகாப்பு பணிக்காக 330 கம்பெனி துணை ராணுவம் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தற்போது வரை 45 கம்பெனி துணை ராணுவப்படை வந்துள்ள நிலையில், அடுத்த 2 நாட்களில் மேலும் 15 கம்பெனி வர உள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி போஸ்டர், பேனர் வைத்ததாக 46 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE