கொரோனா தடுப்பூசி: முதல் நாளில் 29 லட்சம் பேர் பதிவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கொரோனா தடுப்பூசி: முதல் நாளில் 29 லட்சம் பேர் பதிவு

Updated : மார் 02, 2021 | Added : மார் 02, 2021
Share
புதுடில்லி: நேற்று (மார்ச் 1) முதல் 60 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக முதல் நாளில் 29 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.நாடு முழுதும் உள்ள, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 'கார்மாபிடைட்டிஸ்' எனப்படும், இரண்டுக்கும் மேற்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்ட, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, கொரோனா தடுப்பூசி போடும் பணி, நேற்று
CovidVaccine, India, VaccinationCentre, MapMyIndia, Corona, கொரோனா, தடுப்பூசி, இந்தியா, தனியார் மருத்துவமனை

புதுடில்லி: நேற்று (மார்ச் 1) முதல் 60 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக முதல் நாளில் 29 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.

நாடு முழுதும் உள்ள, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 'கார்மாபிடைட்டிஸ்' எனப்படும், இரண்டுக்கும் மேற்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்ட, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, கொரோனா தடுப்பூசி போடும் பணி, நேற்று துவங்கியது. இந்த தடுப்பூசிகளை செலுத்துவதற்கு தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் ஒரு தடுப்பூசிக்கு ரூ.250-ம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.


latest tamil news


சுயமாக பதிவு செய்வதற்காக, www.cowin.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதி உள்ளோர், அந்த இணையதளம் வாயிலாக, பதிவு செய்யலாம். அந்த இணையதளத்தில், உங்கள் மொபைல் எண் வாயிலாக, குடும்பத்தினரின் பெயருக்கும் முன்பதிவு செய்யலாம். இந்த இணையதளம் தவிர, ஆரோக்கிய சேது செயலி மற்றும் தடுப்பூசி மையங்களுக்கு நேரில் சென்றும், முன்பதிவு செய்யலாம். தடுப்பூசி செலுத்தும் தனியார் மருத்துவமனைகளின் முகவரி, மருத்துவர்கள், அவர்களின் தொடர்பு எண்கள் உள்ளிட்ட விவரங்களும் இணைக்கப்பட்டுள்ளன.


latest tamil newsதனியார் மருத்துவமனைகளின் விவரங்களை அறிய, https://www.mohfw.gov.in/pdf/PMJAYPRIVATEHOSPITALSCONSOLIDATED.xlsx என்ற முகவரியில் சென்று பட்டியலை டவுன்லோட் செய்யலாம். பொதுமக்களுக்கான 2ம் கட்ட தடுப்பூசி திட்டத்தின் துவக்க நாளான நேற்று இரவு 8:30 மணி வரையில் 29 லட்சம் பேர் பதிவு செய்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.


latest tamil news
வரைபடம் வெளியீடு


கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க துவங்கியது முதல், பரிசோதனை மற்றும் தனிமை முகாம்கள், தடை செய்யப்பட்ட மண்டலங்கள் குறித்த தகவல்களை, டில்லியைச் சேர்ந்த, 'மேப் மை இந்தியா' என்ற நிறுவனம், 'டிஜிட்டல்' வடிவில் வரைபடங்களுடன் வெளியிட்டது. www.maps.mapmyindia.com என்ற தளத்தில் நாடு முழுதும் உள்ள கொரோனா தடுப்பூசி செலுத்தும் அரசு மற்றும் தனியார் மையங்கள், எங்கெங்கு அமைந்துள்ளன என்ற விபரங்களை, வரைபடத்துடன் காணலாம்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X