தமிழகத்தில் ஹேமமாலினி பிரசாரம்

Added : மார் 02, 2021
Share
Advertisement
ஐந்து மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், நட்சத்திர பட்டாளத்தை களமிறக்க திட்டமிட்டுள்ளது, பா.ஜ., மேலிடம். கொரோனா சமயத்தில் பலருக்கு உதவி செய்து பிரபலமானவர், பாலிவுட் நடிகர் சோனு சூட். இவர், மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்யவுள்ளார். அனில் கபூர், அக்ஷய் குமார், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர், மற்ற மாநிலங்களில் பிரசாரம் செய்யவுள்ளனர். சென்னையில் வட மாநிலத்தவர் அதிகமாக
 டில்லி உஷ், ஹேமமாலினி, மம்தா, மம்தாபானர்ஜி, ஸ்டாலின்,

ஐந்து மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், நட்சத்திர பட்டாளத்தை களமிறக்க திட்டமிட்டுள்ளது, பா.ஜ., மேலிடம். கொரோனா சமயத்தில் பலருக்கு உதவி செய்து பிரபலமானவர், பாலிவுட் நடிகர் சோனு சூட். இவர், மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்யவுள்ளார். அனில் கபூர், அக்ஷய் குமார், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர், மற்ற மாநிலங்களில் பிரசாரம் செய்யவுள்ளனர். சென்னையில் வட மாநிலத்தவர் அதிகமாக வசிக்கும் பகுதிகளிலும், இவர்கள் பிரசாரம் செய்யவுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்தவரும், ஹிந்தி நடிகையுமான ஹேமமாலினி, தற்போது, பா.ஜ., - எம்.பி.,யாக உள்ளார். இவர், தமிழகத்தில் நான்கு நாட்கள் தங்கி, பல இடங்களில் பிரசாரம் செய்யவுள்ளார். இந்த கூட்டங்களில் தமிழிலேயே பேசி பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார். ஸ்டாலினைப் போல துண்டு சீட்டு வைத்து பிரசாரம் செய்வாரா அல்லது எதையும் பார்க்காமல் பேசுவாரா என்பது விரைவில் தெரியவரும்.


ஸ்கூட்டரின் கதை!


பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, சமீபத்தில் கோல்கட்டாவில், மின்சார ஸ்கூட்டரில் பயணம் செய்தார். போராட்டத்திற்கு முதல் நாள், மேற்கு வங்க அமைச்சர் ஹக்கிமை போனில் அழைத்து, 'நாளைக்கு, நான் மின்சார ஸ்கூட்டரில் பயணம் செய்ய வேண்டும்; ஸ்கூட்டருக்கு ஏற்பாடு செய்யுங்கள்' என, உத்தரவிட்டார். இதைக்கேட்டு, அமைச்சர் அதிர்ச்சி அடைந்தார்; காரணம், அவருக்கு ஸ்கூட்டர் ஓட்டத் தெரிந்தாலும், பல ஆண்டுகளாக ஸ்கூட்டரைத் தொட்டதில்லை. மேலும், மம்தாவை பின் சீட்டில் உட்கார வைத்து, ஸ்கூட்டரை ஓட்ட வேண்டும். உடனடியாக மின்சார ஸ்கூட்டரை வாங்கினார். போராட்டத்துக்கு முதல் நாள் இரவு, தன் மனைவியை பின் சீட்டில் அமர்த்தி, ஸ்கூட்டியை ஓட்டிப் பார்த்தார்.அடுத்த நாள். போக்குவரத்து பிரச்னை வரக் கூடாது என்பதற்காக, ஸ்கூட்டி செல்லும் வழியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஒரு வழியாக மம்தாவை பின் சீட்டில் அமர வைத்து, ஆபீஸ் வரை சென்ற பின் தான், பெருமூச்சு விட்டார், அமைச்சர் ஹக்கீம். ஆபீசிலிருந்து திரும்பும் போது, மம்தா தானாகவே ஸ்கூட்டியை ஓட்ட முயற்சித்தார்; முடியவில்லை. போலீஸ்காரர்கள், 'பேலன்ஸ்' செய்யும்படியாகிவிட்டது.




பக்கத்திலேயே இருப்பது நல்லது



மார்ச், 8ம் தேதியிலிருந்து மீண்டும் பார்லிமென்ட் கூட்டத்தொடர் துவங்க உள்ளது. தி.மு.க., வைச் சேர்ந்த, எம்.பி.,க்கள், இந்த கூட்டத்தில் பங்கேற்க தயங்குகின்றனர். 'தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டில்லியில் உட்கார்ந்து பயனில்லை' என்கின்றனர். இதற்கிடையே 'பார்லிமென்ட் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்கு முன், கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும்' என, லோக்சபா சபாநாயகரும், ராஜ்யசபா தலைவரும் தெரிவித்துள்ளனர். 'தேர்தல் சமயத்தில் தடுப்பூசியா' என, அலறுகின்றனர், தமிழக, எம்.பி.,க்கள். 'தி.மு.க., - காங்., கூட்டணி சீட் பிரச்னை இருக்கும் சமயத்தில், டில்லியில் இருப்பது நல்லதல்ல. காங்., தலைவர்களை, பார்லி.,யில் பார்க்க நேர்ந்தால், இது குறித்து கேட்பர். எனவே, தலைவர் ஸ்டாலின் பக்கத்திலேயே இருப்பது தான் நல்லது' என்கின்றனர், தி.மு.க., - எம்.பி.,க்கள்.




யார் அந்த மூன்று பேர்?


தி.மு.க.,வைச் சேர்ந்த மூன்று எம்.பி.,க்கள், அடிக்கடி, சில மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசி வருகின்றனர். இவர்களில் ஒருவர், முன்னாள் மத்திய அமைச்சர். இவர் அடிக்கடி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்திக்கிறார். மற்றொரு தி.மு.க., - எம்.பி., மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை சந்திக்கிறார். மூன்றாவது எம்.பி., மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசுகிறார். தங்கள் தொழில் தொடர்பாக, இவர்கள் மத்திய அமைச்சர்களை சந்திக்கின்றனரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 'தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி அமைந்தால், மத்திய அமைச்சரவையில் சேருவது தொடர்பாக, இவர்கள் பேச்சு நடத்துகின்றனரோ' என்ற சந்தேகமும், டில்லி அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.


நெருக்கமான அமைச்சர்கள்


ஒவ்வொரு மாதமும், பிரதமர் மோடியின், 'குட் புக்'கில், மூன்று அமைச்சர்கள் இடம் பிடித்திருப்பர். ஒவ்வொரு மாதமும், இந்த பட்டியலில் மாற்றம் இருக்கும். கடந்த இரண்டு மாதமாக, இந்த பட்டியலில் எந்த மாற்றமும் இல்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் தான், கடந்த சில மாதங்களாக, இந்த பட்டியலில் தொடர்ந்து இடம் பெற்றுள்னர். மேற்கு வங்கத்தில், மம்தாவுக்கு நெருக்கடி கொடுப்பதால் அமித் ஷாவும், சீன விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்டதால் ராஜ்நாத் சிங்கும், பட்ஜெட்டில், அனைவரது பாராட்டையும் பெற்றதால், நிர்மலாவும், மோடியின் குட் புக்கில் இடம் பிடித்துள்ளதாக கூறுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X