366 எம்.பி.,க்கள் முதியவர்கள்; 2-ம் கட்ட தடுப்பூசிக்கு தகுதி பெறுகின்றனர்

Updated : மார் 02, 2021 | Added : மார் 02, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: 2-ம் கட்ட கொரோனா தடுப்பூசி திட்டத்தில் முதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் பார்லிமென்டின் இரு அவைகளிலும் உள்ள 777 எம்.பி.,க்களில் பாதி எண்ணிக்கையிலானவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். அவர்களும் தடுப்பூசிக்கு தகுதி பெறுகின்றனர்.இந்தியாவில் ஜனவரி மாதம் சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி இயக்கம் துவங்கியது. தொடர்ந்து
CovidVaccine, MPs, Eligible, Jab, Phase 2, Budget Session, கொரோனா, தடுப்பூசி, எம்பி, பார்லிமென்ட்

புதுடில்லி: 2-ம் கட்ட கொரோனா தடுப்பூசி திட்டத்தில் முதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் பார்லிமென்டின் இரு அவைகளிலும் உள்ள 777 எம்.பி.,க்களில் பாதி எண்ணிக்கையிலானவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். அவர்களும் தடுப்பூசிக்கு தகுதி பெறுகின்றனர்.

இந்தியாவில் ஜனவரி மாதம் சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி இயக்கம் துவங்கியது. தொடர்ந்து நேற்று (மார்ச், 1) பொது மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் இரண்டாம் கட்ட திட்டம் துவங்கியது. பிரதமர் மோடி நேற்று எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோசை பெற்றார். 28 நாட்களுக்குள் இரண்டாவது டோஸ் செலுத்தப்படும். இந்நிலையில் பாராளுமன்ற தரவுகளின்படி 36% லோக்சபா எம்.பி.,க்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். முதியோர்கள் சபை என அழைக்கப்படும் ராஜ்யசபாவில் உள்ள எம்.பி.,க்களில் 62% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.


latest tamil news


அதாவது 539 லோக்சபா எம்.பி.,க்களில் 218 பேரும், 238 ராஜ்யசபா எம்.பி.,க்களில் 148 பேரும் தடுப்பூசிக்கு தகுதி பெற்றுள்ளனர். ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்ட எம்.பி.,க்கள் குறித்த விவரங்கள் இன்னும் திரட்டப்படவில்லை. பட்ஜெட் தொடரின் இரண்டாம் அமர்வு மார்ச் 8-ம் தேதி கூட உள்ளது. அதற்கு முன்பாக மூத்த எம்.பி.,க்களுக்கு முதல் தடுப்பூசி செலுத்தப்படும். முதல் தடுப்பூசி மட்டும் நோய் எதிர்ப்பை கூட்டாது என்றாலும், இது ஒரு நிவாரணமாக இருக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
02-மார்-202117:36:33 IST Report Abuse
Lion Drsekar "366 எம்.பி.,க்கள் முதியவர்கள் 2-ம் கட்ட தடுப்பூசிக்கு தகுதி பெறுகின்றனர்" உலகம் பிறந்தது முதல் இவர்கள் மற்றும் இவர்கள் குடும்ப கட்டிடமாகிப்போனது,நடக்க முடியாதும் பேச முடியாது, தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இருக்கும் நிலையிலும் மக்கள் வரிப்பணத்தில் பல லட்சம் கோடி சபலம் மற்றும் பென்சன் அதைவிட குடும்ப பென்சன் வாழ்க ஜனநாயகம், வந்தே மாதரம்
Rate this:
periasamy - Doha,கத்தார்
02-மார்-202118:21:34 IST Report Abuse
periasamyஅதுக்கு வழியில்லாவிட்டால் கட்சி மாற திட்டமிடுதல் ? இளந்தலை முறை எப்பதான் எம் பி ஆவது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X