அரசியல் செய்தி

தமிழ்நாடு

உதயநிதி விலகினாரா? அறிவாலயத்தில் திகில்

Updated : மார் 03, 2021 | Added : மார் 02, 2021 | கருத்துகள் (80)
Share
Advertisement
விழுப்புரத்தில் பேசிய அமித் ஷா, 'ராகுலை பிரதமராக்க வேண்டும் என்பதில் சோனியாவுக்கு அக்கறை; உதயநிதியை முதல்வராக்க வேண்டும் என்பதில் ஸ்டாலினுக்கு அக்கறை. இருவருக்கும் மக்கள் மீது அக்கறை கிடையாது. இந்த வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவோம்' என, பேசினார்.'என்னால்தானே அப்பாவுக்கு இந்த கெட்ட பெயர்; நான் ஒதுங்கி விடுகிறேன். அப்பா முதல்வரானால், அதுவே எனக்கு போதும்' என்று
உதயநிதி, உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலின், மு.க.ஸ்டாலின், திமுக, தி.மு.க.,  தேர்தல்,  முதல்வர்,

விழுப்புரத்தில் பேசிய அமித் ஷா, 'ராகுலை பிரதமராக்க வேண்டும் என்பதில் சோனியாவுக்கு அக்கறை; உதயநிதியை முதல்வராக்க வேண்டும் என்பதில் ஸ்டாலினுக்கு அக்கறை. இருவருக்கும் மக்கள் மீது அக்கறை கிடையாது. இந்த வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவோம்' என, பேசினார்.

'என்னால்தானே அப்பாவுக்கு இந்த கெட்ட பெயர்; நான் ஒதுங்கி விடுகிறேன். அப்பா முதல்வரானால், அதுவே எனக்கு போதும்' என்று கூறி, உதயநிதி விலகி விட்டதாக, சமூக ஊடகத்தில் தகவல் பரவியது. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி விருப்ப மனு கொடுத்திருக்கிறார். தி.மு.க., மீதான எந்த விமர்சனத்துக்கும் இடமளிக்க கூடாது என, உ.பி.,களுக்கு புத்திமதி கூறும் ஸ்டாலின், மகனின் தியாகத்தால் மகிழ்ந்து நன்றி சொன்னதாகவும் ஒரு தகவல் சுற்றியது.


தேர்தல் களம் உதயநிதி விலகினாரா? அறிவாலயத்தில் திகில்

latest tamil news




'அய்யய்யோ, அப்படி என்றால் இனி வாரிசு அரசியல் புகாரை ஸ்டாலின் மீது வீச முடியாதே...' என, பா.ஜ., கவலையில் ஆழ்ந்து விட்டதாகவும் சொன்னார்கள்.

விசாரித்தபோது தான் தெரிந்தது, எல்லாம், 'டுபாக்கூர்' செய்திகள். 'அப்பாவை முதல்வர் நாற்காலியில் அமர வைப்பதே, என் லட்சியம்; மற்றவை எல்லாம் அப்புறம்' என, ஏதோ ஒரு ஊரில் உதய் பேசினாராம். அதுதான் காது, மூக்கு வளர்ந்து, பூச்சாண்டியாக மாறியதாம். அதற்குள் அறிவாலயத்தில் அத்தனை திகில் + பரபரப்பு. அரசியல்ல நல்ல சேதி வந்தா, நம்ப கூடாது டே...!

Advertisement




வாசகர் கருத்து (80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் ஷா தனது வாரிசு யாரையும் அரசியலுக்கு கொண்டுவர மாட்டேனென்று சொல்வாரா
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
06-மார்-202112:50:56 IST Report Abuse
bal ஸ்டாலினுக்கே தகுயில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்...உதயநிதி யார்.
Rate this:
D. Selestine Arputharaj - Pilavilai, Mondaymarket,இந்தியா
08-மார்-202113:28:44 IST Report Abuse
D. Selestine Arputharajஇதை சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கிறது...
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
06-மார்-202112:50:02 IST Report Abuse
bal சும்மா சீன் போடாதே...பிரசாந்த் சொல்லிக்கொடுத்தது நாடகம் பண்ணு என்று. ரொம்பதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X