குஜராத் உள்ளாட்சி தேர்தல்: காங்.,கை வீழ்த்திய பா.ஜ.,

Updated : மார் 03, 2021 | Added : மார் 02, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
ஆமதாபாத் : குஜராத் உள்ளாட்சி தேர்தலில், காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி, பா.ஜ., அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இம்மாநிலத்தில், 31 மாவட்ட பஞ்சாயத்துகள், 81 நகராட்சிகள் மற்றும் 231 தாலுகா பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் மொத்தமுள்ள, 8,474 பதவிகளில், 237 பேர், போட்டியின்றி தேர்வாயினர்.
 குஜராத், உள்ளாட்சி தேர்தல், பா.ஜ.,  முன்னிலை, B.J.P,BJP,Bharatiya Janata Party,

ஆமதாபாத் : குஜராத் உள்ளாட்சி தேர்தலில், காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி, பா.ஜ., அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது.

குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இம்மாநிலத்தில், 31 மாவட்ட பஞ்சாயத்துகள், 81 நகராட்சிகள் மற்றும் 231 தாலுகா பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் மொத்தமுள்ள, 8,474 பதவிகளில், 237 பேர், போட்டியின்றி தேர்வாயினர். மீதமுள்ள இடங்களுக்கான தேர்தலில் பதிவான ஓட்டு எண்ணிக்கை, நேற்று காலை துவங்கியது. முதற்கட்ட முடிவுகள் வெளியான நிலையில், பா.ஜ., 2,085 இடங்களில் வென்றது. காங்கிரஸ், 602 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதாக, மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.


latest tamil news



இங்கு, முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்ட, ஆம் ஆத்மி கட்சியினர், 15 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி, 5 மற்றும் சுயேட்சைகள், 42 இடங்களிலும் வென்றுள்ளனர்.அத்துடன், பெரும்பாலான இடங்களில், பா.ஜ., முன்னிலையில் உள்ளது. இம்மாநிலத்தில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில், உள்ளாட்சி தேர்தல் வெற்றி, பா.ஜ., தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
03-மார்-202114:24:34 IST Report Abuse
Malick Raja விளக்குஅணையும் முன் சுடர்விட்டெரியும் என்பது உண்மையாக இருக்கவேண்டாமா ?
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
03-மார்-202118:29:01 IST Report Abuse
Dr. Suriyaஅதுதான் சொடலை ஆக்ரோஷமா மேடை பேச்சு பேசுறாரோ ..........
Rate this:
Cancel
S.PALANISAMY - COIMBATORE,இந்தியா
03-மார்-202111:03:19 IST Report Abuse
S.PALANISAMY பஞ்சாபில் நடந்த உள்ளாடசி தேர்தலில் பா.ஜா.க பெரும் தோல்வியை சந்தித்தது.அப்பொது விரிவான கவரேஜ் இல்லையே ஏன் ? குஜராத்தில் பா.ஜா.க ஜெயிப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல.
Rate this:
NandaIndia, ஹிந்து என்று சொல்லி தலை நிமிர்வோம்அப்படி பார்த்தால் பஞ்சாபில் கான்க்ராஸ் ஜெயிப்பதும் பெரிய விஷயமில்லை தானே....
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
03-மார்-202108:27:45 IST Report Abuse
Balaji வடக்கன்ஸ் அறிவில்லாதவிங்கன்னு நாங்க சொல்லிருவோமே.. ஹி ஹி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X